📅 Wednesday, 09 September 2026 IST | ஆவணி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology September 09, 2026 07:04 PM

புதிய, பழைய வாகனங்கள் விற்பனை தளத்தை அறிமுகப்படுத்திய கிராப்

புதிய, பழைய வாகனங்கள் விற்பனை தளத்தை அறிமுகப்படுத்திய கிராப்

புதிய அல்லது பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்க விரும்புவோருக்கு உதவும் வகையில், கிராப் நிறுவனம் தனது புதிய இணையம் மூலம் கார் விற்பனைத் தளம் ஒன்றைப் புதன்கிழமையன்று (செப்டம்பர் 9) அதிகாரபூர்வமாகத் தொடங்கியது.

விற்பனைத் தளம் தொடங்கப்பட்ட அன்றைய தினம் மாலை 5.30 மணி அளவில், ‘எஸ்ஜி கார் சாய்ஸ்’, ‘கார்டைம்ஸ் ஆட்டோமொபைல்’ ஆகிய வாகன விநியோக நிறுவனங்களின் கார்கள் மற்றும் கிராப் நிறுவனத்தின் வாடகை நிறுவனமான ‘கிராப்ரெண்டல்ஸ்’ கார்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் இணையத்தளத்தில் பட்டியலிடப்பட்டிருந்தன.பட்டியலிடப்பட்ட 20க்கும் மேற்பட்ட புதிய கார்கள் அனைத்துமே மின்சார அல்லது கலப்பு எரிசக்தி வாகனங்களாகும்.

அவற்றுள் ‘புரோட்டோன் இமாஸ் 7’ மின்சாரக் கார், ‘பிஒய்டி சீல் 6 டிஎம்-ஐ’ பிளக்-இன் ஹெைப்ரிட் கார், ‘டோங்ஃபெங் பாக்ஸ்’ மின்சாரக் கார் மற்றும் ‘ஹியூண்டே கோனா ஹைப்ரிட்’ ஆகிய கார்கள் அடங்கும். வாகனங்களை வாங்கும் நடைமுறையை எளிதாக்கும் நோக்கில் இந்த விற்பனைத் தளம் தொடங்கப்பட்டுள்ளதாகக் கிராப் நிறுவனம் தனது செய்தியறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.