📅 Wednesday, 09 September 2026 IST | ஆவணி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 09, 2026 07:04 PM

சேயோன் படத்தில் சீமான் கெட்டப்பை பார்த்தீங்களா.. பிரதீப் ரங்கநாதன் படம் மிஸ் ஆகிடுச்சு.. எஸ்கே படம்?

சேயோன் படத்தில் சீமான் கெட்டப்பை பார்த்தீங்களா.. பிரதீப் ரங்கநாதன் படம் மிஸ் ஆகிடுச்சு.. எஸ்கே படம்?

சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் சேயோன் படத்தில் சீமான் நடிக்கப் போவதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்தன. மேலும், அவர் முருகக் கடவுளாக நடிக்கப் போவதாக கிளம்பிய வதந்திகள் காரணமாக கடும் சர்ச்சைகள் வெடித்தன. இந்நிலையில், சேயோன் படத்தில் நடிக்கும் சீமானின் கெட்டப் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.

தம்பி, வாழ்த்துகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய சீமான் சில படங்களில் நடித்தும் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக மாறிய நிலையில், சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

ஆனால், அரசியலில் தொடர் சரிவு காரணமாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து இந்த ஆண்டு வெளியான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் பிரதீப் அப்பாவாக நடித்திருந்தார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

சேயோன் படத்தில் சீமான்: சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பில் உருவாகி வரும் சேயோன் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அந்த படத்தில் சீமான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். வேட்டி, சட்டையுடன் கிராமத்து பெரியவர் தோற்றத்தில் சீமான் நடிக்க உள்ளார். சிவகார்த்திகேயனின் அப்பாவாக நடிக்கிறாரா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

கமல் தயாரிப்பில் சீமான்: கமல்ஹாசன் தயாரிப்பில் சீமான் நடிக்க உள்ளார் என்பது அரசியல் வட்டாரத்திலும் சினிமா வட்டாரத்திலும் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் சீமான் சரிவை சந்தித்த நிலையில், தொடர்ந்து சினிமாவில் நடிகராக நடிக்க கிளம்பி விட்டாரா என்றும் ட்ரோல்கள் குவிந்து வருகின்றன.

விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு: ஏற்கனவே முதலமைச்சர் விஜய் குறித்து சீமான் தொடர்ந்து எதிர்ப்புக் குரல் கொடுத்து வரும் நிலையில், சேயோன் படத்துக்கு விஜய் ரசிகர்கள் நெகட்டிவிட்டியை கிளப்புவார்களா என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன. இந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பராசக்தி படம் விஜய்யின் ஜன நாயகன் படத்துடன் மோத ரெடியான நிலையில், ஏகப்பட்ட நெகட்டிவிட்டியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

நல்லா இருந்தா ஓடும்: தாய் கிழவி படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் பால சரவணன், சிங்கம்புலி, அருள் தாஸ், முனிஷ்காந்த் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பை சுவாரஸ்யமாக ரசிகர்களுக்கு கொடுத்து படத்தை வெற்றிப்படமாக மாற்றிக் காட்டினார். படம் நல்லா இருந்தா சேயோன் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்றும் தொடர்ந்து சீமானை சினிமாவில் பார்ப்பது நல்ல விஷயம் தான் என்றும் கூறுகின்றனர்.