📅 Monday, 07 September 2026 IST | ஆவணி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology September 07, 2026 05:02 PM

ஈரானின் கார்க் தீவு அழிக்கப்படுவது போல் ஏஐ படம்; ஈரானுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

ஈரானின் கார்க் தீவு அழிக்கப்படுவது போல் ஏஐ படம்; ஈரானுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: ஈரானின் கார்க் தீவு தாக்கப்பட்டு முற்றிலும் அழிக்கப்படுவது போன்ற செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ மற்றும் படங்களை அதிபர் டிரம்ப் வெளியிட்டு ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக உலகின் முக்கிய எண்ணெய் வர்த்தக கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளது. மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க ராணுவம் அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளது.

தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு மீது குண்டுவீசித் தாக்கப்படுவது போன்ற செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ மற்றும் படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதிபர் டிரம்ப் வெளியிட்ட அந்தப் படத்திற்கு, 'பை-பை கார்க்' என்று தலைப்பில் குறிப்பிட்டுள்ளார். அதில் போர் விமானங்கள் கார்க் தீவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது குண்டுவீசி அழிப்பது போன்ற காட்சிகள் சித்திரிக்கப்பட்டுள்ளன.

இதனுடன் சேர்த்து ஈரானின் பொருளாதாரம் சீரழிந்துவிட்டதைக் காட்டும் வகையில், 'ஈரானின் நாணயம் அழிக்கப்பட்டுவிட்டது', 'ஈரானில் கடுமையான பணவீக்கம் ஏற்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டு ஈானின் வரைப்படத்தையும் டிரம்ப் வெளியிட்டுள்ளார். அதில் டிரம்பின் போட்டோ இடம்பெற்றுள்ளது.

இதற்கிடையே உண்மையில் கார்க் தீவின் மீது அமெரிக்கா எந்தத் தாக்குதலும் நடத்தவில்லை என ராணுவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். டிரம்ப் ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கும் நோக்கிலேயே இந்த ஏஐ புகைப்படம் மற்றும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார் என அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வென்ஸ் தெரிவித்துள்ளார்.