📅 Friday, 16 October 2026 IST | புரட்டாசி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 16, 2026 04:03 PM

கனமழை காரணமாக முதல்வர் விஜயின் கேரள பயணம் ரத்து

கனமழை காரணமாக முதல்வர் விஜயின் கேரள பயணம் ரத்து

கனமழை காரணமாக முதல்வர் விஜயின் கேரள பயணம் ரத்து

கோவை: முதல்வர் விஜயின் கேரள பயணம் ரத்து செய்யப்பட்டது. கோவை மற்றும் கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஹெலிகாப்டரில் செல்ல அனுமதி கிடைக்கவில்லை.

கோவையில் ரூ.300 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட பெரியார் அறிவுலகத்தை முதல்வர் விஜய் திறந்து வைத்தார். நூலகத்தின் முகப்பு பகுதியில் உள்ள பெரியார் சிலை மற்றும் பெரியார் அறிவுலகம் கல்வெட்டை திறந்துவைத்தார். கோவையில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்ட பணிகளை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். கோவையில் ரூ.32.32 கோடி மதிப்பில் 144 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டினார். ரூ.34.72 கோடியில் 9,343 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கினார் முதல்வர் விஜய். வீடு இல்லாதவர்களுக்கு தலா 9 லட்சம் மதிப்பிலான வீடுகளை வழங்கி முதலமைச்சர் விஜய் சிறப்பித்தார். இந்நிலையில் இன்று கோவையில் விழா முடிந்ததும் மதியம் 2 மணியளவில், கேரளாவிற்கு செல்ல முதலமைச்சர் விஜய் செல்ல திட்டமிட்டு இருந்தார்.