📅 Friday, 16 October 2026 IST | புரட்டாசி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 16, 2026 01:03 PM

நீர்வளத்துறை செயலரை விட விஷ்ணு ரெட்டிக்கு அங்கே என்ன வேலை?

நீர்வளத்துறை செயலரை விட விஷ்ணு ரெட்டிக்கு அங்கே என்ன வேலை?

நீர்வளத்துறை செயலரை விட விஷ்ணு ரெட்டிக்கு அங்கே என்ன வேலை?- துரைமுருகன்

கோதாவரி-கிருஷ்ணா-காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் பற்றி பேசினார்கள் என்றால், அதற்கான வரைவு போடப்பட்டதா? சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க முடிவு எடுத்தார்களா? கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்புக்காக பிரதமரை சந்தித்து கோரிக்கை வைப்பது தொடர்பாக இறுதி செய்யப்பட்டதா? இந்த சந்திப்பில் நீர்வளத்துறை செயலாளர் எங்கே? என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிருஷ்ணா நீர் பங்கீடு, கோதாவரி – காவிரி நதிநீர் இணைப்பு குறித்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை முதல்வர் விஜய் சந்தித்துள்ளார். இரு மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த சந்திப்பின் போது, தமிழக நீர்வளத்துறை செயலர் உள்ளிட்ட தமிழக அதிகாரிகள் யாருமே இல்லை. அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா தவிர, முதல்வர் விஜயின் ஆலோசகர் விஷ்ணு ரெட்டி தான் பிரதானமாக இருந்துள்ளார். நீர்வளத்துறை செயலரை விட விஷ்ணு ரெட்டிக்கு அங்கே என்ன வேலை? விஜய் ஆட்சி அமைந்த பின், 4.42 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பல தொழில் முதலீடுகள் ஆந்திராவிற்கு சென்று விட்டன.

நதிநீர் இணைப்பு கடிதத்தை, சந்திரபாபு நாயுவிடம் விஜய் தந்துள்ளார். அதைக்கொடுக்க ஏன் ஆந்திரா போக வேண்டும்; தமிழகத்தில் இருந்தே, ‘போஸ்ட்’ செய்திருக்கலாம். மாநில பிரச்னைகள் தொடர்பாக, அதிகாரப்பூர்வ பேச்சு நடத்த போவதாக சொல்லி, முதல்வர் விஜய் தனிப்பட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதை வழக்காமகவே வைத்திருக்கிறார்.முதலீட்டை ஈர்ப்பதற்காக, லண்டன் செல்வதாக சொல்லி, ஐந்து நாட்கள் பயணத்தில், 3 நாட்கள் என்ன செய்தார்; அங்கே கார் பந்தயத்தில் பங்கேற்றார். ஆந்திரா, கேரளம் இப்படி தனிப்பட்ட பயணங்களுக்கு, மாநில நலன் என்ற, ‘ஸ்டிக்கர்’ ஒட்டிக் கொள்கிறார். அரசு பணத்தில் செல்கிறவர், அரசின் பணியை மேற்கொண்டதாக சொல்லக்கூடியவருக்கு, என்ன பணியை மேற்கொண்டார் என்பதை, மக்களுக்கு விளக்கக்கூடிய தார்மீக கடமையும் பொறுப்பும் உண்டு. அரசு முறை பயணங்களை மேற்கொள்ளும் போது பின்பற்றப்படும் மரபுகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன.”எனக் குறிப்பிட்டுள்ளார்.