📅 Thursday, 08 October 2026 IST | புரட்டாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 08, 2026 10:04 PM

புலாவ் தெக்கோங்கில் மயக்க நிலையில் காணப்பட்ட தேசிய சேவையாளர் மரணம்

புலாவ் தெக்கோங்கில் மயக்க நிலையில் காணப்பட்ட தேசிய சேவையாளர் மரணம்

புலாவ் தெக்கோங்கில் மயக்க நிலையில் காணப்பட்ட முழுநேர தேசிய சேவையாளர் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்ததார்.

புலாவ் தெக்கோங், அடிப்படை ராணுவப் பயிற்சி முகாம் பள்ளி 3ல் உள்ள கட்டடத்தில் வியாழக்கிழமை (அக்டோபர் 8) பிற்பகல் 1.22 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது என்றும் அந்த நேரத்தில் அவர் எந்தப் பயிற்சியிலும் ஈடுபடவில்லை என்றும் தற்காப்பு அமைச்சு தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

உடனடியாக புலாவ் தெக்கோங் மருத்துவ மையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு அவசரச் சிகிச்சை அளிக்கப்பட்ட அவர், பின்னர் ஹெலிகாப்டர் மூலம் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். பிற்பகல் 2.05 மணிக்கு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர், பிற்பகல் 2.27 மணிக்கு இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

“உயிரிழந்த தேசிய சேவையாளரின் குடும்பத்தினருக்கு தற்காப்பு அமைச்சும் சிங்கப்பூர் ஆயுதப்படையும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றன,” என்று தற்காப்பு அமைச்சு பதிவிட்டுள்ளது.

இந்தத் துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்குச் சிங்கப்பூர் ஆயுதப்படை தேவையான உதவிகளை வழங்கி வருவதாக அப்பதிவு குறிப்பிட்டது.

சம்பவம் குறித்து விசாரணை தொடர்கிறது.