📅 Friday, 09 October 2026 IST | புரட்டாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 08, 2026 11:04 PM

வட்டி விகிதத்தை உயர்த்தியது ரிசர்வ் வங்கி: வீடு, வாகனம், தனிநபர் கடன் வட்டி உயரும்

வட்டி விகிதத்தை உயர்த்தியது ரிசர்வ் வங்கி: வீடு, வாகனம், தனிநபர் கடன் வட்டி உயரும்

மும்பை: வங்​கி​களுக்​கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25% உயர்த்தி உள்​ளதால் வீடு, வாக​னம், தனி​நபர் கடன் வட்டி உயரும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

அமெரிக்​கா - ஈரான் போர் காரண​மாக கச்சா எண்​ணெய் விலை உயர்ந்​த​தால் பணவீக்​கம் உயர்ந்து ரூபாய் மதிப்​பும் சரிந்து வருகிறது. இந்நிலையில், ரிசர்வ் வங்​கி​யின் நிதிக் கொள்​கைக் குழு கூட்​டம் ஆளுநர் சஞ்​சய் மல்​ஹோத்ரா தலை​மை​யில் மும்பையில் நடை​பெற்​றது.

இக்​கூட்​டத்​தில், வங்​கி​களுக்கு வழங்​கப்​படும் குறுகியகால கடன் மீதான (ரெப்​போ) வட்டி விகிதத்தை 5.25-லிருந்து 5.5 சதவீத​மாக உயர்த்த ஒரு​மன​தாக முடிவு செய்​யப்​பட்​டது. கடைசி​யாக கடந்த 2023-ம் ஆண்டு வட்டி உயர்த்​தப்​பட்​டது. மூன்​றரை ஆண்டுகளுக்குப் பிறகு வட்டி உயர்த்​தப்​பட்​டுள்​ளது.

இக்கூட்​டத்​துக்​குப் பிறகு ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்​சய் மல்​ஹோத்ரா கூறும்போது, ‘‘ரெப்போ விகிதத்தை 0.25% உயர்த்த முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. சர்​வ​தேச அளவில் பணவீக்​கம் மேலும் அதி​கரிக்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. வர்த்தக நிச்​சயமற்ற தன்மை தொடர்ந்து நீடிக்​கிறது. உலகளா​விய சூழல் பலவீனமாகவே உள்​ளது. போரின் தாக்​க​மும் வர்த்​தகம் மற்​றும் விநி​யோகச் சங்​கி​லிகளை சீர்​குலைக்​கக்​கூடும்.

இருப்​பினும், இந்​தி​யப் பொருளா​தா​ரம் வலு​வாக இருக்​கிறது. நடப்பு நிதி​யாண்​டில் நம் நாட்​டின் பணவீக்​கம் 4.4 ஆக இருக்​கும் என கணிக்​கப்​பட்​டுள்​ளது” என்​றார். இந்த வட்டி உயர்வு காரணமாக, வீடு, வாக​னம், தனி​நபர் கடன்​கள் மீதான வட்டி விகிதத்தை வங்​கி​கள்​ உயர்த்​தும்​ என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.