📅 Thursday, 08 October 2026 IST | புரட்டாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 08, 2026 06:04 PM

ஆர்டிஎஸ் திட்டம் ஒத்திவைப்பு: ஜோகூர் பாரு

ஆர்டிஎஸ் திட்டம் ஒத்திவைப்பு: ஜோகூர் பாரு

ஜோகூர் பாரு: ஜோகூர் பாரு-சிங்கப்பூர் ஆர்டிஎஸ் ரயில் இணைப்பு தொடக்கம் ஒரு மாதகாலம் ஒத்திவைக்கப்பட்டது.

அதை மலேசிய அதிகாரிகள் வரவேற்றுள்ளனர். செயல்பாடுகள் சீராக இருப்பதை உறுதிப்படுத்த இந்நடவடிக்கை போதுமான அவகாசம் வழங்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.

2027 பிப்ரவரி வரை ஒத்திவைப்பு

வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆர்டிஎஸ் திட்டத்தைத் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இப்போது அது பிப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திட்டத்தில் மேலும் தாமதம் ஏற்படக்கூடும் என்ற கவலைகள் இருந்துவருகின்றன. அப்படி எதுவும் இல்லை என்று மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆன்டனி லோக் கூறியுள்ளார்.

ஜேபி சென்ட்ரலில் வியாழக்கிழமை (அக்டோபர் 8) நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திரு லோக், முதலில் திட்டமிடப்பட்டபடி ஆர்டிஎஸ் திட்டம் ஜனவரியில் தயாராகியிருக்கும் என்றும் உள்கட்டமைப்புப் பணிகள் கணிசமான அளவு முடிந்துவிட்டதாகவும் தெரிவித்தார். இறுதிக் கட்டச் சோதனைகள், மலேசிய மற்றும் சிங்கப்பூர் அதிகாரிகள் ஒப்புதல் வழங்குவது போன்ற பணிகள் எஞ்சியுள்ளன.

“திட்டத்தை பிப்ரவரியில் அறிவிக்கலாம் என்று எடுக்கப்பட்ட முடிவு நமக்குத் தயாராகிக்கொள்ள கூடுதல் காலத்தை அளிக்கிறது. அதை ஜனவரியிலும் அறிவிக்கலாம். ஆனால், இப்போது எல்லா நடைமுறைகளும் சீராக இருப்பதை உறுதிப்படுத்தக் கூடுதல் காலம் உள்ளது,” என்று திரு லோக் விவரித்தார்.

எனினும், எந்தத் தேதியில் சேவை தொடங்கும் என்று தம்மால் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது என்று சொன்னார். அது, மலேசிய நிலப் பொதுப் போக்குவரத்து அமைப்பு, சிங்கப்பூரின் நிலப் போக்குவரத்து ஆணையம் ஆகியவை ஒப்புதல் அளிப்பதைப் பொறுத்தது என்றும் அவர் தெரிவித்தார்.

முக்கிய கட்டம்

சோதனைகள் உள்ளிட்ட பணிகளை நடத்துவதற்கான முக்கியக் கட்டத்தில் இத்திட்டம் இருப்பதாக அவர் கூறினார். அதற்குப் பிறகு ஆர்டிஎஸ் திட்டம் ஒப்புதலைப் பெற மலேசிய நிலப் பொதுப் போக்குவரத்து ஆணையத்திடம் வரும் டிசம்பர் 30 ஆம் தேதி சமர்ப்பிக்கப்படும்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

“ஒப்புதல்கள் கிடைத்தவுடன் குறிப்பிட்ட தேதியை நாங்கள் உங்களிடம் தெரியப்படுத்துகிறோம். கால அவகாசத்தைப் பொறுத்தவரை பிப்ரவரியில் தொடங்கப்படும் என்று நாங்கள் ஓரளவு நம்பிக்கையுடன் இருக்கிறோம்,” என்று திரு லோக் விளக்கினார்.