📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 24, 2026 05:04 PM

உ.பி.யில் சோகம்; நெடுஞ்சாலையில் சென்ற பஸ் தீப்பிடித்ததில் 9 பேர் பலி

உ.பி.யில் சோகம்; நெடுஞ்சாலையில் சென்ற பஸ் தீப்பிடித்ததில் 9 பேர் பலி

நொய்டா: நொய்டா சர்வதேச விமான நிலையம் அருகே யமுனா விரைவுச்சாலையில், மஹோபா நோக்கிச் சென்றுகொண்டிருந்த பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பயணிகள் 9 பேர் உயிரிழந்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நோய்டா அருகே யமுனா விரைவுச் சாலையில் தனியார் ஸ்லீப்பர் பஸ் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது திடீரென பஸ் தீப்பிடித்து எரிய துவங்கியது; பஸ்சில் பயணிகள் 35 பேர் இருந்தனர். பல பயணிகள் ஜன்னல்கள் வழியாகக் குதித்துத் தப்பித்தபோதிலும், மற்றவர்கள் எரிந்துகொண்டிருந்த பஸ்சின் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் பயணிகள் 9 பேர் உடல்கருகி உயிரிழந்தனர்; மேலும் பல பயணிகள் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். டில்லியிலிருந்து உத்தரப் பிரதேசத்தில் உள்ள மஹோபா நோக்கி பஸ் சென்று கொண்டிருந்த போது விபத்து நிகழந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

பயணிகள் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டதே பலி எண்ணிக்கை அதிகரிப்புக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

எச்சரிக்கை அவசியம்