📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 24, 2026 05:02 PM

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் : வங்கி வேலைநிறுத்ததால் செப்டம்பர் மாதம் முன்கூட்டியே சம்பளம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் : வங்கி வேலைநிறுத்ததால் செப்டம்பர் மாதம் முன்கூட்டியே சம்பளம்

வங்கி ஊழியர்கள் செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருக்கின்றனர். இந்த வேலைநிறுத்தம் மூன்று நாட்கள் நடைபெற இருக்கின்றது. ஒரு சில கோரிக்கைகளை முன் வைத்து வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். எனவே வேலைநிறுத்தமான அந்த மூன்று நாட்கள் வங்கி செயல்படாது என்பதால் வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற குழப்பத்தில் இருக்கின்றனர்.என்னதான் டிஜிட்டல் பணபரிவர்தனைகள் எப்போதும் போல தடையின்றி நடக்கும் என்றாலும் நேரடியாக வங்கிக்கு சென்று முடிக்கும் பணிகளை முன்கூட்டியே முடிக்குமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்நிலையில் இந்த வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் வங்கி வாடிக்கையாளர்களுக்கு குழப்பத்தை கொடுத்திருக்கின்றது என்பது உண்மை தான். ஆனால் அதே சமயம் இந்த வங்கி வேலைநிறுத்ததால் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நற்செய்தி கிடைத்துள்ளது.முன்கூட்டியே சம்பளம்மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் கடைசி வேலை நாட்களில் தான் சம்பளம் வரும். ஆனால் தற்போது வங்கி ஊழியர்கள் செப்டம்பர் 28 முதல் செப்டம்பர் 30 வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருப்பதால் மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை கொடுக்க அரசு திட்டமிட்டு இருக்கின்றது. அதன்படி செப்டம்பர் 25 ஆம் தேதியை மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படுமாம்யாருக்கு பொருந்தும்இந்த உத்தரவு சிவில் அரசு ஊழியர்கள், பாதுகாப்பு துறை ஓய்வூதியதாரர்கள், ரயில்வே ஊழியர்கள், ராணுவம், அஞ்சல்துறை, அனைத்து மத்திய ஓய்வூதியதாரர்களுக்கும் இது பொருந்தும்ஊழியர்கள் செய்ய வேண்டியதுமத்திய அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம் வருவதால் நாம் முக்கியமாக செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்உங்களுடைய EMI மற்றும் SIP பிடித்தம் மாதத்தின் கடைசி தேதியில் தான் திட்டமிட்டு இருப்பதால் செப்டம்பர் 25 ஆம் தேதியை சம்பளம் வரும்போது அதற்கான பணத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும்வங்கி வேலைநிறுத்தத்தில் இருக்கும்போது உங்கள் கணக்கில் போதுமான இருப்பு இல்லையென்றால் ஆட்டோ டெபிட் தோல்வியடைந்து அபராதம் செலுத்த வேண்டிய நிலை வரும். இது உங்கள் கிரெடிட் ஸ்கோரையும் பாதிக்கும்மியூச்சுவல் ஃபண்ட் SIP NAV தேதிகளில் கவனம் வேண்டும்எப்போதும் ஆட்டோ டெபிட் ,EMI ,SIP போன்ற விஷயங்களை நாம் மாத கடைசி தேதியில் தான் திட்டமிட்டு இருப்போம். ஆனால் தற்போது முன்கூட்டியே சம்பளம் வருவதால் இதையெல்லாம் கருத்தில் கொண்டு நாம் செலவழிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது