📅 Thursday, 03 September 2026 IST | ஆவணி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology August 31, 2026 01:04 AM

Tasmac Digital Stock Order : டோட்டலா மாறும் டாஸ்மாக்.! செப்டம்பர் 1

Tasmac Digital Stock Order : டோட்டலா மாறும் டாஸ்மாக்.! செப்டம்பர் 1

Tasmac Digital Stock Order : டோட்டலா மாறும் டாஸ்மாக்.! செப்டம்பர் 1-ம் தேதி முதல் மதுப்பிரியர்களுக்கு குஷி தான்- செம பிளான்

Tasmac New Digital Stock Order System : டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் கேட்கும் மதுபானங்கள் கிடைக்காத நிலையில், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மதுப்பிரியர்கள் விரும்புப் சரக்குகள் கிடைக்க புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

டாஸ்மாக் மதுபானம் ஆன்லைன் ஆர்டர்

தமிழகத்தில் சுமார் 4000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. மது​பானங்​கள் 11 நிறு​வனங்​களிடம் இருந்​தும், பீர் வகைகள் 7 நிறு​வனங்​களிடம் இருந்​தும் கொள்​முதல் செய்​யப்​படு​கின்​றன. அந்த வகையில் டாஸ்மாக் கடைகள் மூலம் நாளொன்றுக்கு சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டப்பட்டுகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில், மதுபான பாட்டிலுக்கு கூடுதல் கட்டணமாக ரூ.10, ரூ.20 வசூலிப்பதைத் தடுக்கும் வகையில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்துவிட்டு, கடைகளில் நேரடியாகச் சென்று மதுபானங்களை பெற்றுக் கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சில நேரங்களில் கடைகளில் ஸ்டாக் குறைவாக இருப்பதால், வாடிக்கையாளர்கள் கேட்கும் மதுபானத்திற்கு பதிலாக வேறு பிராண்டுகளை வாங்க வேண்டிய சூழலும் ஏற்படும் நிலை உள்ளது.

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் டாஸ்மாக் புதிய மாற்றம்

இந்த நிலையில் மதுப்பிரியர்கள் கேட்கும் சரக்குகள் கிடைக்கும் வகையில் புதிய திட்டத்தை டாஸ்மாக் நிர்வாகம் தொடங்கவுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளிலும் மதுபான தேவைப் பட்டியல் சமர்ப்பிக்கும் நடைமுறை செப்டம்பர் 1ஆம் தேதி முதல் டிஜிட்டல் மற்றும் தானியங்கி முறைக்கு மாற்றப்படவுள்ளது. இந்த புதிய நடைமுறை மூலம் இதன் மூலம் தற்போது நிலவும் சரக்கு தட்டுப்பாடு மற்றும் குறிப்பிட்ட பிராண்டுகள் கிடைக்காத நிலை ஓரளவு குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய டிஜிட்டல் Indent முறையில், ஒவ்வொரு கடைக்கும் தேவையான மதுபானங்களின் அளவு கணினி மூலம் தானாகக் கணக்கிடப்படும். டாஸ்மாக் வழங்கும் பிரத்யேக கைக்கருவியில், ஒவ்வொரு கடையின் முந்தைய விற்பனை மற்றும் தேவையின் அடிப்படையில் பிராண்ட் மற்றும் அளவுவாரியான அடிப்படை சரக்கு அளவு தானாகத் தோன்றும்.

என்னென்ன சரக்குகள் அதிகம் விற்பனை.?

உள்ளூர் விற்பனைத் தேவையை கருத்தில் கொண்டு, மேற்பார்வையாளர்கள் கணினி நிர்ணயிக்கும் அளவை விட கூடுதலாக அதிகபட்சம் 20 சதவீதம் வரை சரக்கை கோர முடியும். இதனால் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிகம் விற்பனையாகும் மதுபானங்கள் கடைகளில் தேவையான அளவில் இருப்பு வைப்பதற்கு வாய்ப்பு அதிகரிக்கும். முக்கியமாக, இனி Indent-ஐ மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு நேரடியாக எடுத்துச் சென்று சமர்ப்பிக்கும் நடைமுறை தவிர்க்கப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும் OTP மூலம் மதுபானங்களின் ஆர்டர் உறுதி செய்யப்படும்.

உறுதி செய்யப்பட்ட ஆர்டர் நேரடியாக சம்பந்தப்பட்ட உள்ளூர் டாஸ்மாக் கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து கடைகளுக்கு சரக்குகள் விநியோகிக்கப்படும். இதன் மூலம் “கேட்ட சரக்கு கிடைக்கவில்லை” என்ற மதுப்பிரியர்களின் குறை குறைந்து, தேவைக்கேற்ப மதுபானங்கள் டாஸ்மாக் கடைகளில் கிடைக்கும் நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இனிமேல், அந்தந்தப் பகுதிகளில் எந்த மதுபானங்கள் அதிகமாக விற்பனையாகிறதோ, அதன் அடிப்படையில் தானியங்கி முறையில் பங்கீட்டு அளவு கணக்கிடப்பட்டு, அந்தப் பிராண்டுகள் கடைகளுக்கு தடையின்றி அனுப்பப்படும் என்பதால் மதுப்பிரியர்கள் குஷியில் உள்ளனர்.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி