📅 Thursday, 03 September 2026 IST | ஆவணி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 03, 2026 07:10 PM

DMK: சென்னையை 10 ஆக உடைத்து போட்ட திமுக

DMK: சென்னையை 10 ஆக உடைத்து போட்ட திமுக

DMK: சென்னையை 10 ஆக உடைத்து போட்ட திமுக - புதிய மாவட்ட செயலாளர்கள் யார்? உத்தேச பட்டியல் இதோ..!

DMK Chennai District Secretaries: சென்னையை அமைப்பு ரீதியாக 10 மாவட்டங்களாக திமுக பிரித்துள்ள நிலையில், புதிய மாவட்ட செயலாளர்களுக்கான உத்தேச பட்டியல் வெளியாகியுள்ள்ளது.

DMK Chennai District Secretaries: திமுகவில் அமைப்பு ரீதியாக 6 மாவட்டங்களாக இருந்த சென்னை தற்போது 10 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

10 மாவட்டங்களாக பிரிக்கப்பட்ட சென்னை திமுக

சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சியை மறுசீரமைக்கும் பணியில் திமுக தீவிரமாக களமிறங்கியுள்ளது. அதன்படி மாவட்ட செயலாளர்களுக்கு வயது வரம்பு, மாவட்ட செயலாளராக ஒருவரால் இரண்டு முறை மட்டுமே பதவி வகிக்க முடியும், ஒரு மாவட்ட செயலாளருக்கு அதிகபட்சமாக மூன்று தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்பது போன்ற பல விதிகளும் கொண்டுவரப்பட்டுள்ளன. இதையடுத்து இதுநாள் வரை அந்த கட்சியில் அமைப்பு ரீதியாக இருந்த 77 மாவட்டங்கள் தற்போது 110 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னையில் இருந்த அமைப்பு ரீதியான மாவட்டங்களின் எண்ணிக்கை ஆறிலிருந்து 10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

முன்னாள் மாவட்ட செயலாளர்கள்:

முன்னதாக திமுகவில் 6 மாவட்ட செயலாளர்கள் பதவிகள் இருந்தன. அதன்படி,

சென்னை திமுக - உத்தேச மாவட்ட செயலாளர்கள் பதவி

இந்நிலையில் மறுசீரமைப்புக்குப் பிறகு சென்னையில் புதிய மாவட்ட செயலாளராக பொறுப்பேற்க உள்ள நபர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி,

திமுக மறு சீரமைப்பு செய்யப்பட்டதில் புதிதாக நியமிக்க உள்ள சென்னை மாவட்ட செயலாளர்கள் பட்டியல் உத்தேச பட்டியல்..

1. சென்னை வடகிழக்கு - திருவெற்றியூர், மாதவரம்- புழல் நாராயணன் அல்லது கே பி பி சங்கர் அல்லது மாதவரம் சுதர்சனம்

2. சென்னை வடக்கு- பெரம்பூர், கொளத்தூர் - கிரிராஜன் அல்லது ஆர்டி சேகர்

3. சென்னை வட மேற்கு - ராயபுரம்,ஆர் கே நகர் - சுபேர் கான் அல்லது இளையா அருணா

4. சென்னை மத்திய - எழும்பூர் (தனி), அண்ணா நகர் -பரந்தாமன் அல்லது கார்த்திக்

5. சென்னை மத்திய கிழக்கு - சேப்பாக்கம், திருவல்லிக்கேணி ஆயிரம் விளக்கு - சிற்றரசு

6. சென்னை மத்திய மேற்கு- மதுரவாயல்- அம்பத்தூர் -முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்

7. சென்னை கிழக்கு- துறைமுகம், திரு வி க நகர் ( தனி), வில்லிவாக்கம் - முன்னாள் அமைச்சர் சேகர்பாபு

8. சென்னை தென்மேற்கு - விருகம்பாக்கம், தியாகராஜ நகர் - கேகே நகர் தனசேகர் அல்லது முன்னாள் எம்எல்ஏ பிரபாகர் ராஜா. 9. சென்னை தென்கிழக்கு -சைதாப்பேட்டை, மயிலாப்பூர், வேளச்சேரி - முன்னாள் அமைச்சர் மா சுப்பிரமணியன்

10. சென்னை தெற்கு- சோழிங்கநல்லூர்- அரவிந்த் ரமேஷ்.

இது உத்தேச பட்டியல் மட்டுமே ஆகும். உட்கட்சி தேர்தலுக்குப் பிறகு புதிய மாவட்ட செயலாளர்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை திமுக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: CM Vijay: புதிய கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஆவடிக்கு 24 மணி நேரமும் சேவை - புதிய அறிவிப்புகளால் அதிரவிட்ட விஜய்

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி