📅 Thursday, 03 September 2026 IST | ஆவணி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology September 03, 2026 11:04 AM

தமிழ்நாட்டில் 52 கோயில்களுக்கு செல்போன் எடுத்துச் செல்லத் தடை; எந்தெந்தக் கோயில்கள்?|முழுப் பட்டியல்

தமிழ்நாட்டில் 52 கோயில்களுக்கு செல்போன் எடுத்துச் செல்லத் தடை; எந்தெந்தக் கோயில்கள்?|முழுப் பட்டியல்

தமிழ்நாட்டில் 52 கோயில்களுக்கு செல்போன் எடுத்துச் செல்லத் தடை; எந்தெந்தக் கோயில்கள்?|முழுப் பட்டியல்

தமிழ்நாட்டில் 52 கோயில்களுக்கு செல்போன் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 முதுநிலை திருக்கோயில்களுக்குள் பக்தர்கள், பொதுமக்கள் புகைப்படம் மற்றும் விடியோ எடுக்கும் வசதி கொண்ட கைப்பேசியை எடுத்துச் செல்லக் கூடாது என்ற உத்தரவு நேற்று முதல் (செப்.1) முதல் அமலுக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், ``ஏற்கெனவே உள்ள நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலும், திருக்கோயில்களில் பக்தர்கள் அமைதியான சூழலில் இறைவனைத் தரிசனம் செய்வதற்காகவும், தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள 52 முதுநிலைத் திருக்கோயில்களில் மட்டும் மொபைல் போன்களை எடுத்துச் செல்வதற்கான தடை செயல்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பழனி, திருச்செந்தூர், மதுரை, ராமேஸ்வரம் ஆகிய திருக்கோயில்களில் மொபைல் போன்களுக்குத் தடை நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 முக்கியத் திருக்கோயில்களில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில்களின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கவும், வீடியோ/ரீல்ஸ் எடுப்பதைத் தடுக்கவும் இக்கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் 52 முதுநிலைத் திருக்கோயில்கள் மாவட்டவாரியாகப் பிரிக்கப்பட்டு கீழே வழங்கப்பட்டுள்ளன:சென்னை

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்

சென்னை வடபழனி ஆண்டவர் கோயில்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில்

திருவள்ளூர்

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில்

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி / வடிவுடையம்மன் கோயில்

பெரியபாளையம் பவானி அம்மன் கோயில்

காஞ்சிபுரம்

செங்கல்பட்டு

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில்

மாங்காடு காமாட்சி அம்மன் கோயில்

குன்றத்தூர் முருகன் கோயில்

இராணிப்பேட்டை

சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில்

திருவண்ணாமலை

விழுப்புரம்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில்

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில்

உறையூர் வெக்காளியம்மன் கோயில்

திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில்

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் (பெரிய கோயில்) & தேவஸ்தான கோயில்கள்

ஒப்பிலியப்பன் கோயில் (வேங்கடாசலபதி திருக்கோயில்)

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்

தான்தோன்றிமலை கல்யாண வேங்கட்ரமண சுவாமி கோயில்

திண்டுக்கல்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்

அய்யம்பாளையம் வாழைத்தோட்டத்து அய்யன் கோயில்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்

மதுரை கள்ளழகர் கோயில்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில்

மதுரை சோலைமலை முருகன் கோயில் (பழமுதிர்சோலை)

மதுரை கூடலழகர் கோயில்

மடப்புறம் அடைக்கலம் காத்த அய்யனார் கோயில்

இருக்கன்குடி மாரியம்மன் கோயில்

இராமநாதபுரம்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில்

தென்காசி திருக்குற்றாலநாத சுவாமி கோயில்

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயில்

தென்காசி திருமலை குமாரசாமி கோயில் (பண்பொழி)

தூத்துக்குடி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்

கன்னியாகுமரி

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில்

கோயம்புத்தூர்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில்

ஆனைமலை மாசாணியம்மன் கோயில்

தேக்கம்பட்டி வனபத்ர காளியம்மன் கோயில்

பேரூர் பட்டீஸ்வர சுவாமி கோயில்

ஈச்சனாரி விநாயகர் கோயில்

சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோயில்

பவானி சங்கமேஸ்வரர் கோயில்

சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில்

நாமக்கல் நரசிம்மசுவாமி கோயில்

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில்

சேலம் சுகவனேஸ்வரர் கோயில் / கோட்டை மாரியம்மன் கோயில்