டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்: யாரையும் பழிவாங்கும் நோக்கம் அரசுக்கு இல்லை
டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்கு தி.மு.க மற்றும் அ.தி.மு.க. கட்சிகளே காரணம். பணிக்கு வராத டாஸ்மாக் ஊழியர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளில் பாட்டிலுக்கு குறைந்த பட்சம் ரூ.10 அதிகமாக வாங்கப்படுவதாக நீண்ட காலமாகவே குற்றச்சாட்டு உள்ளது.த வெசு ஆட்சிக்கு வந்தால், இந்த முறைகேடுஅடியோடு ஒழிக் கப்படும் என கூறப்பட்டது. தேர்தலுக்கு முன்னர் முதல்-அமைச்சர் விஜய் தனது கரூர் பிரசாரத்தின் போது, பாட்டிலுக்கு 10 ரூபாய் என்று பாட்டும் பாடினார். ஆகவே அவர் இந்த ஊழலை ஒழிப்பதில் உறுதியாக உள்ளார்.
பணம் பெறுவதாக புகார்
எனவே டாஸ்மாக் பணியாளர்களுக்கு அரசு தொடர் எச்சரிக்கையும் விடுத்த்து. அதையும் மீறி, சில ஊழியர்கள் பணம் பெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.இதைதடுக்கும் வகையில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு கிட்டத்தட்ட இரண்டு மடங்கு ஊதியம் வழங்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் அறிவித்தார்.
மேலும் 8 மணி நேர வேலை, வார விடுப்பு, மாதத்தில் 2 நாள் தற்செயல் விடுப்பு. பண்டிகை முன்பணம், சீரூடை வாங்க ரூ.6 ஆயிரம் எனபல்வேறு சலுகைகள்அறிவிக்கப்பட்டன.
தொடர் சஸ்பெண்ட்
ஆகவே இனிமேலும் கூடுதலாகவ சூலித்தால் கடும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கைவிடப்பட்டது. இருந்த போதிலும் வசூல் வேட்டை நின்ற பாடில்லை. முதல் நாளில் 67 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக செய்தி வெளியானது. 2 ஆம் நாளில் மேலும் பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அந்த வகையில் நேற்று முன்தினம் வரை மொத்தம் 230 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இப்படிப்பட்ட நிலையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல கடைகள் திறக்கப்படவில்லை.
இந்த போராட்டத்துக்கு. வெற்றுப் பாட்டில்களை வாங்க அதிகாரிகள் நிர்பந்திப்பதாக குற்றம் சாட்டினர். ஆனால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டதால்தான் போராட்டம் நடத்தியதாக அரசு குற்றம் சாட்டியது. இந்த நிலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 44 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டி ருப்பதாகக் கூறப்படுகிறது.
பழிவாங்கும் நோக்கம் அரசுக்கு இல்லை
இந்நிலையில் கலால் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் கோவை பொள்ளாட்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:
டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்கு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சி களே காரணம். பழிவாங்கும் நோக்கத்தில் டாஸ்மாக் ஊழியர்களை சஸ்பெண்ட் செய்யவில்லை.
மது பாட்டில்களை திரும்ப வாங்குவதற்கு விரைவில் தீர்வு காணப்படும். கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இதுபோன்ற பிரச்சினைகள் இல்லை. கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதில்லை. மற்ற பகுதிகளில் ஊழியர்களை தவறான பாதைக்கு வழிகாட்டுகின்றனர்.
அரசு ஒரு போதும் அடிபணியாது
இவ்வாறு அவர் கூறினார்.