📅 Thursday, 10 September 2026 IST | ஆவணி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 09, 2026 11:34 PM

ரூ 260 கோடி வசூல் வேட்டை.. சூர்யாவின் 'விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்.. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ரூ 260 கோடி வசூல் வேட்டை.. சூர்யாவின் 'விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்.. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை: நடிகர் சூர்யா 'விஸ்வநாதன் & சன்ஸ்' திரைப்படம் தியேட்டரில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் நாக வம்சியின் சித்தாரா என்டர்டெய்ன்மெண்ட்ஸ் தயாரிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இந்த படத்தை இயக்கினார். சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோர் நடித்து இருக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையத்தார். தியேட்டரில் வரவேற்பை பெற்ற இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்: திருமணத்தை விரும்பாத 40 வயது தொழிலதிபரான சூர்யா வாடகை தாய் மூலம் ஒரு குழந்தைக்கு தந்தை ஆகிறார். அக்குழந்தைக்கு ஏற்படும் அரிய வகை நோயை குணப்படுத்த போராடுவது தான் இந்த படத்தின் கதை. 'விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள், வயது வித்தியாசத்தை மையமாக வைத்து ஒரு புதுவிதமான காதல் திரைப்படமாக இப்படம் இருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு சூர்யாவை ஒரு அழகான குடும்ப கதையில் அழகாக நடித்திருக்கிறார். லவ், ரொமான்ஸ் என அனைத்து அம்சங்களும் படத்தில் இருக்கின்றன. அதுமட்டுமின்றி, எந்த ஒரு உறவிலும் பிரச்சினை ஏற்பட்டால் அதை மனம் விட்டு பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். பேசாமல் விட்டுவிட்டால் அந்த இடைவெளி பிரிவை ஏற்படுத்திவிடும் என்ற முக்கியமான கருத்தையும் படம் அழகாக சொல்லி இருக்கிறார்கள் என படம் பார்த்தவர்கள் பாராட்டினார்கள்.

ஓடிடி ரிலீஸ் தேதி: ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் 25 நாள்களில் உலக அளவில் ரூ.260 கோடியை வசூலித்து திரையரங்குகளில் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு முன் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான கருப்பு திரைப்படம் ரூ. 300 கோடிக்கும் அதிமகாக வசூல் செய்து சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்த நிலையில் 'விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்' திரைப்படமும் நல்ல வசூலை அள்ளி உள்ளது. நிலையில் இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதிகுறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்டமொழிகளில் செப்டம்பர் 11ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தை தியேட்டரில் பாக்க தவறியவர்கள் நிச்சயம் வீட்டில் குடும்பத்தோடு இந்த படத்தை பார்த்து ரசிக்கலாம்.