நடிப்பவர்களுக்கு வாக்களித்தால் மக்கள் பிரச்னை தீராது: பிரேமலதா எம்எல்ஏ காட்டம்
நடிப்பவர்களுக்கு வாக்களித்தால் மக்கள் பிரச்னை தீராது: பிரேமலதா எம்எல்ஏ காட்டம்
விருத்தாச்சலம்: நடிப்பவர்களுக்கு வாக்களித்தால் மக்கள் பிரச்னை தீராது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
தேமுதிக பொதுச்செயலாளரும் எம்எல்ஏவுமான பிரேமலதா விஜயகாந்த் விருத்தாச்சலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆளுங்கட்சி களத்திற்கு வராமல் அங்கேயே உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. மக்கள் ஓட்டு போட்டு இருக்கிறார்கள். அனைவரும் களத்திற்கு வர வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு மூட்டைக்கு பத்து ரூபாய் என்பது பத்தாது. விலைவாசி அந்த அளவிற்கு ஏறிவிட்டது. இதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். ஆனால் அரசின் கவனம் வேறு எங்கேயோ இருக்கிறது. இடைத்தேர்தல் வேறு வந்துவிட்டது. தேவையில்லாமல் ராஜினாமா செய்து இவர்களாகவே ஒரு இடைத்தேர்தலை கொண்டு வந்து விட்டார்கள்.
நேர விரயம் பண விரயம் தான். லஞ்சமே இல்லாத நேர்மையான ஆட்சி என்கிறார்கள். யார் மக்களுக்காக பேசுகிறார்கள், யார் மக்களுக்காக உழைக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ரீல்ஸ் போடுவது, போட்டோ ஷூட் பண்ணுவது இவர்களைதான் மக்கள் நம்புகிறார்கள். யார் மக்களை நேசிக்கிறார்கள், யார் மக்களுக்காக உழைக்கிறார்கள் என்று பார்த்து அவர்களுக்கு மக்கள் துணை நில்லுங்கள், நடிப்பவர்களுக்கு வாக்களித்தால் மக்கள் பிரச்னை தீராது, இவ்வாறு அவர் கூறினார்.