முதியோர் இல்லத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்பிளி: ரசிகர்கள் கவலை
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி, தானேவில் உள்ள முதியோர் பராமரிப்பு மையத்தில் இருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் அவரது உடல்நிலை குறித்து ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். வீடியோவில் பேசியுள்ள வினோத் காம்ப்ளி, தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், முதியோர் இல்லத்தில் உள்ள வசதிகள் சிறப்பாக இருப்பதாகவும், தமக்கு அங்கு மிகுந்த அன்பும் மரியாதையும் கிடைப்பதாகவும் கூறியுள்ளார். எனினும், வினோத் காம்ப்ளி நிரந்தரமாக முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கிறாரா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. தற்போது அவர் தானேவில் உள்ள முதியோர் பராமரிப்பு மையத்தில் சிகிச்சை மற்றும் பராமரிப்பில் இருப்பதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக வினோத் காம்ப்ளிக்கு உடல்நலப் பிரச்சினைகள் இருந்து வருகின்றன. 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறுநீரகப் பாதை தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அவரது உடல்நிலை தொடர்பாக அவரது நண்பரும் முன்னாள் முதல்தர நடுவருமான மார்கஸ் கவுட்டோ சில தகவல்களை தெரிவித்திருந்தார். காம்ப்ளியின் மூளையில் ரத்தக்கட்டி இருப்பதாகவும், அதன் காரணமாக நினைவாற்றல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், காம்ப்ளி பராமரிப்பு மையத்தில் இருந்து வெளியிட்டுள்ள புதிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் அவர் பேசுவதற்கு சிரமப்படுவது போன்று தெரியும் காட்சிகள் ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன. இந்திய அணிக்காக 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய காம்ப்ளி 1,084 ரன்களும், 104 ஒருநாள் போட்டிகளில் 2,477 ரன்களும் எடுத்துள்ளார். சச்சின்