📅 Sunday, 27 September 2026 IST | புரட்டாசி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 27, 2026 05:03 PM

வாக்காளர் ஆவணங்களை வீடுகளுக்கே சென்று சேகரிக்க உத்தரவு

வாக்காளர் ஆவணங்களை வீடுகளுக்கே சென்று சேகரிக்க உத்தரவு

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியின்போது பெயர்கள் விடுபட்டவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று ஆவணங்களைச் சேகரிக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் சனிக்கிழமை (செப்டம்பர் 26) பிற்பகலில் உயர்நிலைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

வாக்காளர் ஆவணங்களில் முரண்பாடுகள் இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தேர்தல் ஆணையம் விவர முரண்பாடு குறித்த அறிவிப்பை அனுப்பும். அவ்வாறு அறிவுப்பு அனுப்பப்பட்ட வாக்காளர்களைத் தேர்தல் அலுவலகங்களுக்கு நேரில் வருமாறு வற்புறுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று உரிய ஆவணங்களைப் பெற வேண்டும். பெறப்பட்ட ஆவணங்களை ‘இசிஐநெட்’ மென்பொருளில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மிகவும் தவிர்க்கமுடியாத காரணங்களுக்காக மட்டுமே வாக்காளர்களைத் தேர்தல் அலுவலகங்களுக்கு வரவழைக்க வேண்டும். இணையவழியில் நடைபெறும் விசாரணையில் சம்பந்தப்பட்ட வாக்காளருக்குப் பதிலாக அவருடைய குடும்ப உறுப்பினரும் கலந்துகொள்ளலாம்.

இரவு தங்குமிடங்களில் வசிப்போர், ஊழியர்கள், ஏழைகள், வீடற்றோருக்காகச் சிறப்பு உதவி மையங்களை அமைக்க வேண்டும். அவர்களுக்காகச் சிறப்பு முகாம்களுக்கு மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் தகுந்த முறையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

மென்பொருள் சார்ந்த விவகாரங்களைத் துணைத் தேர்தல் ஆணையர் தலைமையிலான தொழில்நுட்ப நிபுணர்கள் குழு ஆய்வு செய்யும்.

டெல்லி, மகாராஷ்டிரா மாநிலத் தேர்தல் அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்றுச் சிறப்புப் பணிகளுக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட இருபது மாநிலங்களில் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. அம்மாநிலங்களில் விடுபட்ட வாக்காளர்களும் புதிய வாக்காளர்களும் தேர்தல் பதிவு அலுவலரிடம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.