📅 Wednesday, 23 September 2026 IST | புரட்டாசி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 23, 2026 10:03 AM

 முதல்வருக்கு ஹிந்து முன்னணி நன்றி

 முதல்வருக்கு ஹிந்து முன்னணி நன்றி

திருப்பூர்: ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ர மணியம் வெளியிட்ட அறிக்கை:

இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழா, 'தமிழர் பண்பாடும் சனாதன ஹிந்து மதமும் ஒன்றே' என்ற தலைப்பில் சிறப்பாக நடந்தது; ஹிந்துக்கள் குடும்பத்தோடு, அனைத்து சமூகத்தினரும் ஒருங்கிணைந்து விழாவை நடத்தினர்.

விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறிய முதல்வரின் மாண்பை வரவேற்கிறோம்.

சில இடங்களில் வழக்கம்போல் விழாவுக்கு தொந்தரவு செய்தனர். ஆனால், ஹிந்துக்களின் ஒற்றுமை மற்றும் துணிச்சல் காரணமாக அவை அடங்கிப் போயின.

ஹிந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் நுாற்றாண்டு விழா தொடக்கமாக, கடந்த 19ம் தேதி, விநாயகர் சதுர்த்தி விழாவுடன் அன்னதானம், ரத்த தானம், உடல் உறுப்பு மற்றும் தேக தானமும் நடந்தன.

விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த ஒத்துழைத்த தமிழக முதல்வர் மற்றும் காவல்துறை உள்ளிட் டோருக்கு ஹிந்து முன்னணி நன்றி தெரிவிக்கிறது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.