72வது தேசிய திரைப்பட விருதுகள்: மூன்றாவது தேசிய விருது பெற்ற ஜிவி பிரகாஷ்
ஜனாதிபதி திரௌபதி முர்முவிடமிருந்து ‘அமரன்’ திரைப்படத்தின் சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பெற்றுக்கொண்டார்.
இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954-ம் ஆண்டு முதல் 'தேசிய விருதுகள்' வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற பல துறைகளுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.
72-வது தேசியத் திரைப்பட விருதுகள் விழா முதல்முறையாக டெல்லியிலிருந்து மாற்றப்பட்ட குஜராத் மாநிலம் ஏகதா நகரில் நடைபெற்று வருகிறது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கிவருகிறார்.
சிறந்த பின்னணி இசை- ஜி.வி.பிரகாஷ் குமார்
ஜனாதிபதி திரௌபதி முர்முவிடமிருந்து ‘அமரன்’ திரைப்படத்தின் சிறந்த பின்னணி இசைக்காக ஜிவி பிரகாஷ் தேசிய விருதைப் பெற்றுக்கொண்டார்.
இது ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு மூன்றாவது தேசிய விருதாகும். ‘சூரரைப் போற்று’ மற்றும் ‘வாத்தி’ திரைப்படங்களுக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதைப் பெற்றுள்ளார்.
3 தேசிய விருதுகளை வென்ற “அமரன்”
சிறந்த இயக்குநர் - ராஜ்குமார் பெரியசாமி
மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இயக்கிய ‘அமரன்’ திரைப்படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை ராஜ்குமார் பெரியசாமி தட்டிச் சென்றுள்ளார்.
சிறந்த பின்னணி இசை-ஜி.வி.பிரகாஷ் குமார்
‘அமரன்’ திரைப்படத்திற்கு ஆக்ரோஷமும் காதலும் கலந்த உலகத்தரம் வாய்ந்த பின்னணி இசையை வழங்கியதற்காக ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
சிறந்த எடிட்டிங் - ஆர்.கலைவாணன்
‘அமரன்’ திரைப்படத்தின் நேர்த்தியான படத்தொகுப்பிற்காக சிறந்த எடிட்டருக்கான தேசிய விருதைப் பெறுகிறார் ஆர்.கலைவாணன்.
#amaran my third blessing ❤️ thank u all #nationalfilmawards pic.twitter.com/Ni824Z4m8e