📅 Sunday, 11 October 2026 IST | புரட்டாசி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Malaysia Tamil October 11, 2026 03:04 PM

மலேசிய வரவுசெலவுத் திட்டம்:சுற்றுலாத் துறைக்கு 32.5% நிதி உயர்வு

மலேசிய வரவுசெலவுத் திட்டம்:சுற்றுலாத் துறைக்கு 32.5% நிதி உயர்வு

கோலாலம்பூர்: மலேசிய வரவுசெலவுத் திட்டம் 2027ல் சுற்றுலாத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9) நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட விவரங்களின்படி, அந்நாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கப் பற்பல திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டைவிட 32 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட நிதி அத்துறைக்கென ஒதுக்கப்பட்டுள்ளது.

தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தேசிய நினைவுச் சின்னங்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கும் விதமாக பல மேம்பாட்டுத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சுதந்திரம் பிரகடனம் செய்யப்பட்ட வளாகம், சென்ட்ரல் மார்க்கெட் எனப்படும் முக்கிய சந்தை, வரலாற்றுச் சிறப்புமிகு கட்டங்கள், மரபுடைமைத் தளங்கள் போன்றவற்றை இணைக்கும் கூரையுடன் அமைக்கப்பட்ட நடைபாதைகள் அவற்றில் அடங்கும்.

வருகையாளர்களுக்குச் சுங்க வரியற்ற (டியூட்டி ஃப்ரீ) சலுகைகள் உட்பட பல ஏற்பாடுகளை அரசாங்கம் செய்யவுள்ளது.

அந்தத் திட்டங்களை ‘ஆர்டிஎஸ்’ எனப்படும் சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் - ஜோகூரின் புக்கிட் சாகார் விரைவு ரயில் திட்டம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்குவதற்கு முன் செயல்படுத்துவதும் மலேசிய அரசாங்கத்தின் இலக்காக உள்ளது.

2025 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘விசிட் மலேசியா 2026’ எனப்படும் சுற்றுலாப் பயணிகளை அந்நாட்டுக்கு வரவேற்கும் இயக்கத்தை 2027ஆம் ஆண்டுவரையில் நீட்டிக்கவும் முடிவெடுக்கப்பட்டது. அதற்கென S$293 மில்லியன் (மலேசிய ரிங்கிட் 935 மில்லியன்) நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த ஆண்டில் அந்த இயக்கத்துக்கு மலேசிய ரிங்கிட் 705 மில்லியன் ஒதுக்கப்பட்டது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

இதற்கிடையே ஜோகூர் பாருவில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டுவரவும் மலேசியா திட்டமிடுகிறது. அதையும் ஆர்டிஎஸ் விரைவு ரயில் இணைப்பு தொடங்கப்படுவதற்கு முன் செயல்படுத்த காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.