📅 Wednesday, 14 October 2026 IST | புரட்டாசி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 14, 2026 06:04 PM

சிங்கப்பூர் பள்ளிகள்: புகைமூட்டம் காரணமாக வெளிப்புற நடவடிக்கைகள் குறைப்பு

சிங்கப்பூர் பள்ளிகள்: புகைமூட்டம் காரணமாக வெளிப்புற நடவடிக்கைகள் குறைப்பு

சிங்கப்பூரின் மேற்கு வட்டாரத்தில் புதன்கிழமை (அக்டோபர் 14) பிற்பகலில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடான பிஎம்2.5, ஆக உயர்ந்த நிலையை எட்டியதால், சில பள்ளிகள் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்து வருகின்றன.

மேரி ஸ்டெல்லா உயர்நிலைப் பள்ளி வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளை ரத்து செய்துள்ளது.

நன் ஹுவா உயர்நிலைப் பள்ளி குறைந்தது ஓர் இணைப்பாட நடவடிக்கையை ரத்து செய்துள்ளதாகக் கூறியது. காற்பந்து இணைப்பாட நடவடிக்கையை பாசிர் ரிஸ் உயர்நிலைப் பள்ளி ரத்து செய்தது.

இதுதொடர்பாக அப்பள்ளி புதன்கிழமையன்று ஆசிரியர்களுக்கு அனுப்பிய அறிவிப்பில், மாணவர்கள் பள்ளிக்குப் பிந்தைய நடவடிக்கைகளைக் குறைக்கவும் இடைவேளையின் போது உணவகங்களுக்குள் சாப்பிடவும் அறிவுறுத்தியது.

இதற்கிடையே, அக்டோபர் 15, 16 ஆகிய தேதிகளில் உடற்கல்வி வகுப்புகள், வெளிப்புற விளையாட்டு உட்பட அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளையும் நிறுத்தி வைப்பதாகப் பெற்றோர்களுக்கு சிஎச்ஐஜே (கெல்லாக்) தொடக்கப் பள்ளி தெரிவித்தது.

செயின்ட் ஆண்ட்ரூஸ் தொடக்கப் பள்ளி, மாணவர்கள் டிசம்பர் 31ஆம் தேதி வரை உடற்கல்வி உடையில் பள்ளிக்குவர அனுமதிக்கும் எனத் தெரிவித்தது.

ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கணக்கிடப்படும் பிஎம்2.5 அளவீடுகளின் அடிப்படையில் பள்ளிகள் தங்களின் நடவடிக்கைகளை மாற்றியமைக்க வேண்டும் எனக் கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

காற்றுச் சுத்திகரிப்பானுடன் கூடிய மூடப்பட்ட இடங்களில் பாடங்களும் தேசியத் தேர்வுகளும் தொடர்வதாகக் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

24 மணிநேரக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 300ஐத் தாண்டி அபாயக் கட்டத்திற்குள் நுழைந்தால், பள்ளிகளை மூடுவது, தேர்வுகளை ஒத்திவைப்பது ஆகியவை குறித்து கல்வி அமைச்சு பரிசீலிக்கும் என்றும் அவர் கூறினார்.