📅 Wednesday, 23 September 2026 IST | புரட்டாசி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 23, 2026 05:05 AM

வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ் ஏட்டு கைது

வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ் ஏட்டு கைது

வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ் ஏட்டு கைது.

சென்னை பெரவள்ளூர் ஜி.கே.எம். காலனி, 26-வது தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 48). கடந்த 2002-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்த இவர், தற்போது சென்னை தலைமை செயலக குடியிருப்பு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை செய்து வருகிறார்.

வளர்ப்பு மகளுக்கு கொடுமை

திருமணம் ஆன வேல்முருகன், முதல் மனைவி இருக்கும்போதே இரண்டாவதாக 46 வயது பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். அந்த இரண்டாவது மனைவிக்கு ஏற்கனவே முதல் கணவர் மூலம் 25 வயதில் ஒரு மகனும், 17 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், ஏட்டு வேல்முருகன் தனது இரண்டாவது மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த 17 வயது வளர்ப்பு மகளுக்கு தொடர்ந்து பாலியல் பலாத்கார தொல்லை அளித்து வந்ததாக தெரிகிறது.

வேல்முருகனின் இந்த விபரீத செயலால் அந்த இளம்பெண் கடந்த 2022-ம் ஆண்டு கர்ப்பமடைந்துள்ளார். அதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு அரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ரகசியமாக கருகலைப்பு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னரும், வேல்முருகன் அந்த பெண்ணை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

தொடர் கொடுமையால் மனமுடைந்த பாதிக்கப்பட்ட இளம்பெண், இதுகுறித்து கொளத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து, போலீஸ் ஏட்டு வேல்முருகனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கைது செய்யப்பட்டுள்ள ஏட்டு வேல்முருகன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.