📅 Tuesday, 06 October 2026 IST | புரட்டாசி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 06, 2026 04:03 AM

Sigma Day 3 Box Office: சன்டே சிக்ஸர் அடித்ததா சிக்மா?.. ஜேசன் சஞ்சய் படம் 3 நாட்கள் வசூல் எவ்வளவு?

Sigma Day 3 Box Office: சன்டே சிக்ஸர் அடித்ததா சிக்மா?.. ஜேசன் சஞ்சய் படம் 3 நாட்கள் வசூல் எவ்வளவு?

சென்னை: லைகா தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சம்பத் ராஜ், ராஜு சுந்தரம், அன்புதாசன், ஷிவ் பண்டிட் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்திக்கு வெளியான படம் தான் சிக்மா.

முதலமைச்சர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய படத்தை அவரது குடும்பத்தினரான அம்மா மற்றும் சகோதரி தியேட்டருக்குச் சென்று பார்த்தனர். ஜேசன் சஞ்சய்க்கு இந்த படத்தை இயக்க பக்க பலமாக செயல்பட்டது அவரது சித்தப்பா சஞ்சீவ் தான்.

தமன் இசையில் கேத்தரின் தெரசா போட்ட குத்தாட்ட பாடல் எல்லாம் ரசிகர்களை தியேட்டரில் ஆட்டம் போட வைத்தாலும், ஞாயிற்றுக்கிழமை கூட சிக்மா படத்தின் வசூல் பெரிதாக அதிகரிக்கவில்லை என்பது லைகாவுக்கு கவலையை தந்துள்ளது.

சிக்மா பட்ஜெட்: சிக்மா படத்தை ஜேசன் சஞ்சய் ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் அவரே சொந்த காசு போட்டு தயாரித்து அதன் பின்னர் தான் லைகாவுக்கு விற்றுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. சுமார் 30 கோடி பட்ஜெட்டில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லாவை வைத்து ஒரு பக்காவான ஆக்‌ஷன் ஹெய்ஸ்ட் படமாக சிக்மா படத்தை உருவாக்கியுள்ளார் ஜேசன் சஞ்சய். ஏற்கனவே ஓடிடி வியாபாரம், ப்ரீ ரிலீஸ் பிசினஸ் என 27 கோடி ரூபாய் தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கு வந்து விட்டதாகவும், தியேட்டர் வசூல் கூடுதல் ஜாக்பாட் தான் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தியேட்டர் விசிட் அடித்த ஜேசன் சஞ்சய்: படம் வெளியாவதற்கு முன்னர் ப்ரீ ரிலீஸ் புரமோஷன்களை தாண்டி படம் வெளியான பின்னர் ஒவ்வொரு ஊருக்கும் சமீப காலமாக படக்குழுவினர் தியேட்டர் விசிட்களை அடித்து ரசிகர்களை தியேட்டர் பக்கம் வரவழைத்து வருகின்றனர். அசோக் செல்வன் அன்பில் அவன் படத்துக்காக பல இடங்களில் தியேட்டர் விசிட் அடித்து வருகிறார். விஜய் சேதுபதியும் சில இடங்களில் பத்தா படத்துக்காக தியேட்டர் விசிட் அடித்துள்ளார். இந்நிலையில், ஜேசன் சஞ்சய்யும் சில தியேட்டர் விசிட்களை அடித்து படத்தை புரமோட் செய்து வருகிறார்.

சிக்மா 3 நாள் வசூல்: லைகா தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்கிய முதல் படமான சிக்மா திரைப்படம் அக்டோபர் 2ம் தேதி வெளியான நிலையில், முதல் 3 நாட்களில் இதுவரை 6.10 கோடி கிராஸ் வசூலும்,5.35 கோடி நெட் வசூலும் செய்துள்ளதாக சாக்நிக் தகவல் தெரிவித்துள்ளது. பத்தா படத்தை விட பாதி தான் சிக்மா படத்துக்கு வசூல் வந்துள்ளது என்றாலும், ஓடிடி வியாபாரம் சிறப்பாக இருந்த நிலையில், படம் நஷ்டம் இல்லை என்கின்றனர். இந்த வாரமும் சிக்மா தியேட்டர்களில் ஓடினால் அதிகபட்சம் 10 கோடி வசூலை கடக்கும் என்கின்றனர்.