📅 Tuesday, 06 October 2026 IST | புரட்டாசி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 06, 2026 01:03 AM

Jailer 2Trailer Review: ஜெயிலர் 2 டிரெய்லர் எப்படி இருக்கு?.. வொர்த் வர்மாவா? அதுக்கும் மேலயா?

Jailer 2Trailer Review: ஜெயிலர் 2 டிரெய்லர் எப்படி இருக்கு?.. வொர்த் வர்மாவா? அதுக்கும் மேலயா?

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தின் அட்டகாசமான அடிபொலி டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுவரை இல்லாத ஜெயிலர் 2 படத்தின் மீதான ஹைப்பை நிச்சயம் இந்த டிரெய்லர் ரிலீஸுக்குப் பிறகு ஜெட் வேகத்தில் அதிகரிக்கும் என உறுதியுடன் கூறலாம்.

இயக்குநர் நெல்சன் ஜெயிலர் படத்தின் ரசிகர்கள் எதிர்பார்த்த அத்தனை விஷயங்களையும் அதுக்கு மேல சில விஷயங்களையும் அடுக்கி அல்ல போலேலே செய்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

டைகர் முத்துவேல் பாண்டியன் பராக்: ஜெயிலர் படத்தில் வில்லன் வர்மனை (விநாயகன்) கொன்ற பின்னர், அவனுக்கு மேல ஒரு பெரிய நெட்வொர்க்கே இருக்கு என முடித்திருப்பார்கள். அந்த லீடையே சரியாக எடுத்துக் கொண்டு வர்மனை கொன்றது யார் என திலீப் (சுராஜ் வெஞ்சரமூடு) தேதி அலைவதும், அவரது கண்ணில் மண்ணைத் தூவி விட்டு டைகர் முத்துவேல் பாண்டியன் தனது குடும்பத்துடன் திலீப் மட்டுமின்றி வர்மனுக்கு மேலே உள்ள அனைவரையும் தேடிப் பிடித்து அழிப்பது தான் ஜெயிலர் 2 படத்தின் கதை என்பதை டிரெய்லர் உணர்த்துகிறது.

எஸ்.ஜே. சூர்யா மிரட்டல்: ஒரு பக்கம் திலீப் கதாபாத்திரத்தில் சுராஜ் வெஞ்சரமூடு சூரத்தனம் செய்ய இன்னொரு பக்கம் ஸ்டைலிஷ் வில்லனாக எஸ்.ஜே. சூர்யா போதி கல்பாக் கதாபாத்திரத்தில் மெர்சல் காட்டியுள்ளார் என்றே சொல்லலாம். அவரது ஸ்க்ரீன் ஸ்பேஸ் மற்றும் அந்த ஜெயிலர் சாவதை தெளிவாக பார்க்க வேண்டும் என சொல்வதும், உன் கிட்ட மட்டும் தான் ஸ்நைப்பர்ஸ் இருப்பாங்களா என டைகர் முத்துவேல் பாண்டியனின் ஸ்நைப்பர்ஸ் டீமுக்கு செக் வைத்து மிரட்டும் காட்சிகள் எல்லாம் தரமான சம்பவம் என்று தான் சொல்ல வேண்டும்.

வித்யா பாலன் வேறமாறி: பாலிவுட் நடிகை வித்யா பாலன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் வந்து டீ வேண்டுமா? காபி வேண்டுமா? எனக் கேட்க, எதுவும் வேண்டாம்ங்க என சொல்கிறார். டீ அல்லது காபி இரண்டில் ஒன்று மட்டுமே சூஸ் செய்ய வேண்டும், வேறு ஆப்ஷன் இல்லை என மிரட்டும் காட்சியெல்லாம் படையப்பா நீலம்பாரியை தூக்கிச் சாப்பிடுவார் என்றே தோன்றுகிறது.

மோகன்லால், சிவராஜ்குமார்: ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன், ரித்விக் என குடும்பத்தினரை டிரைலரில் நெல்சன் காட்டவே இல்லை. மேலும், ஹ்ரித்திக் ரோஷன், விஜய் சேதுபதி உள்ளிட்டோரும் இடம்பெறவில்லை. ஆனால், ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்த மோகன்லால், சிவராஜ்குமார் வரும் காட்சிகள் தூள் கிளப்புகின்றன.

வழக்கம் போல யோகி பாபுவின் ஒன்லைனர் காமெடிகளும் டிரெய்லரிலே எண்டர்டெயின்மென்ட்டை கொண்டு வந்து பிளாஸ்ட் செய்கிறது. கண்டிப்பாக ஜெயிலர் 2 ரசிகர்களை ஏமாற்றாது என்பதற்கு இந்த டிரெய்லர் கட் மூலம் செம உத்தரவாதம் கொடுத்துள்ளனர். அனிருத்தின் பின்னணி இசை, சூப்பர் ஸ்டார் ஸ்டைல் என ஜெயிலர் 2 மெகா விருந்து படைக்கப் போவது உறுதி.