பத்தில் ஒரு சிறப்புப் பள்ளி ஆசிரியர் பணிவிலகல்: டெஸ்மண்ட் லீ
கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறப்புப் பள்ளி ஆசிரியர்களில் பத்தில் ஒருவர் பணிதுறந்துள்ளதாகக் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார்.
வேலை மாற்றம், தனிப்பட்ட காரணங்கள், குடும்பச் சூழல் ஆகியவை இதற்கான முக்கியக் காரணங்கள் என்று தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சார்லின் சென்னின் கேள்விக்கு செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 6) அளித்த எழுத்துபூர்வ பதிலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறப்புப் பள்ளி ஆசிரியர்களின் பணிவிலகல் விகிதத்தை அமைச்சு முதன்முறையாக வெளியிட்டுள்ளது.
இப்பிரிவு ஆசிரியர்கள் சமூகச் சேவை அமைப்புகளின்கீழ் இயங்குவதால் கல்வி அமைச்சின் வழக்கமான ஆசிரியர் பிரிவில் சேரமாட்டார்கள். வழக்கமான பள்ளிகளில் ஆண்டிற்கு சராசரியாக 2 விழுக்காடு, அதாவது ஐம்பதில் ஒருவர் என்ற எண்ணிக்கையிலேயே பணிவிலகல் உள்ளது.
வழக்கமான பள்ளிகளில் ஆசிரியர் பணிவிலகல் குறித்து செங்காங் குழுத்தொகுதி பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹே திங் ரூவின் கேள்விக்கு, ஜூலை மாதம் அளித்த நாடாளுமன்றப் பதிலில், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுதோறும் சராசரியாக 750 ஆசிரியர்கள் பணியிலிருந்து விலகியதாகக் கல்வி அமைச்சு கூறியிருந்தது.
கடந்த 2021 முதல் 2025 வரை சிறப்புப் பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கை 1,600லிருந்து 1,900 ஆக, 18 விழுக்காடு உயர்ந்தது. ஐந்து புதிய பள்ளிகள் தொடங்கப்பட்டதால் மாணவர் எண்ணிக்கை 7,000லிருந்து 9,000 ஆக, 28 விழுக்காடு அதிகரித்தது.
அதிகரித்துவரும் அறிவுசார் குறைபாடுடைய (ஆட்டிசம்) மாணவர்களின் தேவையைப் பூர்த்திசெய்ய 2030களின் தொடக்கத்தில் மேலும் மூன்று சிறப்புப் பள்ளிகள் தொடங்கப்படவுள்ளன.
ஆசிரியர்களைத் தக்கவைக்க 2024 முதல் 2026 வரை ஆசிரியர்களுக்கு 12 விழுக்காடு வரையிலும் உதவி ஆசிரியர்களுக்கு 15 விழுக்காடு வரையிலும் சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. இதன்மூலம் 2026ல் ஆசிரியர்களின் மாதச் சம்பளம் $3,000 முதல் $7,000க்கு மேலாகவும் உதவி ஆசிரியர்களுக்கு $2,000 முதல் $4,000க்கு மேலாகவும் இருக்கும்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
அத்துடன், ஆசிரியர்கள் விடுப்பில் செல்லும்போது றுவதற்கு ஏதுவாகத் தற்காலிக ஆசிரியர் குழு, நிர்வாகச் சுமையைக் குறைக்க ‘பேரண்ட் கேட்வே’ (Parents Gateway) செயலி, நிபுணத்துவ மேம்பாடு, 2025ல் அறிமுகப்படுத்தப்பட்ட தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டம் மூலம் இப்பிரிவினருக்கு அமைச்சு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவதாக அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறினார்.