📅 Wednesday, 07 October 2026 IST | புரட்டாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 07, 2026 06:04 PM

சென்னையிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்ட ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு: 322 பேர் உயிர் தப்பினர்

சென்னையிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்ட ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு: 322 பேர் உயிர் தப்பினர்

சென்னையிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்ட ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு: 322 பேர் உயிர் தப்பினர்

சென்னை: சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்ட ஸ்கூட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இயந்திர கோளாறை விமானி முன்னதாகவே கண்டுபிடித்ததால் விபத்து தவிர்க்கப்பட்டு, 310 பயணிகள் உள்பட 322 பேர் உயிர் தப்பினர். சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஸ்கூட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு புறப்பட்ட தயாரானது. 310 பயணிகள், 12 விமான ஊழியர்கள் உள்பட 322 பேர் செல்ல இருந்தனர்.

விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கியபோது, விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். தொடர்ந்து, விமானத்தை வானில் பறக்க செய்வது பெரும் ஆபத்து என்பதை உணர்ந்த விமானி விமானத்தை ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தினார். அதோடு சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதை தொடர்ந்து, அந்த விமானம் ஓடுபாதையில் இருந்து, இழுவை வண்டி மூலமாக புறப்பட்ட இடத்திற்கே இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

அதோடு விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. விமான பொறியாளர்கள் குழுவினர் விமானத்துக்குள் ஏறி, விமானத்தை பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டு, சென்னை விமான நிலைய ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். நேற்று அதிகாலை 5 மணி வரையில் விமானத்தை பழுது பார்க்க முடியவில்லை.

இதையடுத்து விமானம் ரத்து என்று பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டது. விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகள் அனைவரும் சொகுசு பேருந்துகளில் ஏற்றப்பட்டு, சென்னை நகரில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்க அழைத்துச் செல்லப்பட்டனர். விமானத்தில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறை, விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால் விபத்தில் இருந்து தப்பியதோடு, அதிலிருந்த 310 பயணிகள் உள்பட 322 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.