📅 Wednesday, 14 October 2026 IST | புரட்டாசி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 14, 2026 03:04 AM

நிதி நிறுவனங்களின் பொது நிகழ்ச்சிகளுக்குக் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிமுகம், சிங்க‌ப்பூர் செய்திகள்

நிதி நிறுவனங்களின் பொது நிகழ்ச்சிகளுக்குக் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிமுகம், சிங்க‌ப்பூர் செய்திகள்

பொதுமக்களிடமிருந்து வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கில் நிதி நிறுவனங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கென சிங்கப்பூர் நாணய ஆணையம் கூடுதல் கட்டுப்பாடுகளைத் திங்கட்கிழமை (அக்டோபர் 12) அறிவித்தது.

சாலைக் காட்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அதுபோன்ற நடவடிக்கைகளில் அடங்கும். நிதி சார்ந்த பொருள்களையும் சேவைகளையும் பொது இடங்களில் மக்களிடம் வழங்கும்போதோ விளம்பரப்படுத்தும்போதோ சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளைச் சரிவர மேற்கொள்ளாமல் இருந்தால் கவலைகள் எழக்கூடும்; அதனால் இக்கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனீட்டாளர்களை அவர்களின் விருப்பமின்றி அணுகுவது அல்லது விடாமல் அணுகுவது போன்றவை சரிவர மேற்கொள்ளப்படாத நடவடிக்கைகளில் அடங்கும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் குறிப்பிட்டது.

கூடுதல் கட்டுப்பாடுகளின்கீழ் நிதி நிறுவனங்கள், வர்த்தக வளாகங்களில் ஒதுக்கப்படும் பகுதிகளில்தான் பொதுமக்களை ஈர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அதோடு, அதுபோன்ற நடவடிக்கைகளில் தங்களின் பிரதிநிதிகளின் நடத்தையைக் கண்காணிக்க நிதி நிறுவனங்கள் சரியான தகுதிபெற்ற தனிநபர்களை நியமிக்கவேண்டும்.

தொடக்கத்திலேயே அந்தப் பிரதிநிதிகள், தாங்கள் நிதி சார்ந்த பொருள்களையோ சேவைகளையோ விளம்பரப்படுத்தவிருப்பதைப் பயனீட்டாளர்களிடம் தெரியப்படுத்தவேண்டும். அந்நடவடிக்கையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்வதற்கு முன்பு அவர்கள் பயனீட்டாளர்களின் அனுமதியைப் பெறவேண்டும்.

சாலைகளில் மக்களை நேரடியாகத் தொடர்புகொள்வது, வீடு வீடாகச் சென்று பயனீட்டாளர்களை ஈர்ப்பது ஆகியவற்றுக்கு எதிரான தடை தொடரும்.

இந்த விவகாரத்தில் நல்ல நடத்தையை உறுதிப்படுத்தும் நோக்கில் பரிந்துரைகளைக் கேட்டறிய சிங்கப்பூர் நாணய ஆணையம், பொதுமக்களைத் தொடர்புகொண்டதையடுத்து இந்தக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.