📅 Thursday, 08 October 2026 IST | புரட்டாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 08, 2026 10:03 PM

சவுதி அரேபியாவில் விமான நிலையங்கள் மீது தாக்குதல்; இந்தியா கடும் கண்டனம்

சவுதி அரேபியாவில் விமான நிலையங்கள் மீது தாக்குதல்; இந்தியா கடும் கண்டனம்

ரியாத்: சவுதி அரேபியாவில் விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவின் முக்கிய நகரங்களான ரியாத் மற்றும் அபாவில் உள்ள விமான நிலையங்களில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

36 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கை:

சவுதி அரேபியாவில் உள்ள விமான நிலையங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களை தாக்குதல்களை இந்தியா கண்டிக்கிறது; இத்தாக்குதல்கள் பொதுமக்களின் உயிரிழப்பு மற்றும் காயங்களுக்கு வழிவகுத்துள்ளன.

உள்கட்டமைப்புகளைக் குறிவைப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். சவுதி அரேபியா மக்களுடனும், அரசுடனும் நாங்கள் உறுதுணையாக நிற்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.