📅 Monday, 12 October 2026 IST | புரட்டாசி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 12, 2026 08:04 AM

சிங்கப்பூர் காற்றுத்தரம்: ஆரோக்கியமற்ற நிலை

சிங்கப்பூர் காற்றுத்தரம்: ஆரோக்கியமற்ற நிலை

சிங்கப்பூர் முழுவதும் திங்கட்கிழமை (அக்டோபர் 12) காலை நிலவரப்படி காற்றுத்தரம் தொடர்ந்து ஆரோக்கியமற்ற நிலையில் இருந்தது.

காலை 9 மணி நிலவரப்படி மேற்குப் பகுதியில், 24 மணிநேரத்துக்கான பிஎஸ்ஐ குறியீடு ஆக அதிகமாக 148ஆகப் பதிவானது.

மத்தியப் பகுதியில் 146ஆகவும் கிழக்கில் 133ஆகவும் வடக்கில் 104ஆகவும் தெற்கில் 117ஆகவும் பதிவானது. தேசிய சுற்றுப்புற வாரியத்தின் இணையத்தளத்தில் இவ்விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

24 மணிநேரத்துக்கான பிஎஸ்ஐ குறியீடு 101லிருந்து 200க்குள் இடைப்பட்டிருந்தால் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதாக வகைப்படுத்தப்படுகிறது.