📅 Monday, 12 October 2026 IST | புரட்டாசி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 12, 2026 09:04 AM

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானியின் தொழில் முடங்கிவிடாது; எலான் மஸ்க்

"ஸ்டார்லிங்க் இந்தியாவிற்குள் வருவதால் போட்டி அதிகரித்து அம்பானியின் லாபம் குறையலாமே தவிர, அவரது ஜியோ பிசினஸ் ஒருபோதும் முடங்கிவிடாது" என்று தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்

இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை தொடங்க விண்ணப்பித்து 5 ஆண்டுகள் ஆகியும் இன்னும் இறுதி அனுமதி கிடைக்காததால் உலக பணக்காரரான எலான் மஸ்க் கடும் அதிருப்தியில் உள்ளார். இதற்கு முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தின் முட்டுக்கட்டையே காரணம் என மறைமுகமாகக் குற்றம் சாட்டிய மஸ்க், நேற்று முன்தினம் அம்பானியை இந்தியாவின் பிரதமர் எனக்குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் மிகக் காட்டமாக வம்புக்கு இழுத்தார். தற்போது மீண்டும் முகேஷ் அம்பானியை எலான் மஸ்க் வம்புக்கு இழுத்துள்ளார்.

அம்பானியின் லாபம் குறையலாம்

மலிவான விலையில் இணைய சேவை

மேலும் அவர், "இந்திய மக்கள் உலகிலேயே மிகக் குறைந்த கட்டணத்தில் (ஒரு ஜிபி டேட்டா 8 சென்ட்) இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, ஜியோவின் ஏகபோக ஆதிக்கத்துக்குப் போட்டியாக வரவிருக்கும் ஸ்டார்லிங்க் இணையச் சேவை இந்தியர்களுக்கு மிகவும் மலிவான விலையில் வழங்கப்படும். விலை அதிகமாக இருந்தால் இந்தியாவில் யாரும் ஸ்டார்லிங்க் சேவையை விரும்ப மாட்டார்கள் என்பது எனக்கு தெரியும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.