பிரபலமான பள்ளிகளில் தொடக்கநிலை 1 பதிவு: அரசாங்க வீடுகள் குறைவு
https://www.straitstimes.com/singapore/politics/p1-registration-15-of-phase-2c-students-at-12-popular-primary-schools-live-in-public-housing
தொடக்கநிலை 1 பதிவுக்கான ‘2C’ கட்டத்தில் பிரபலமான 12 பள்ளிகளில் நுழையும் மாணவர்களில் அறுவரில் ஒருவருக்கும் குறைவானவர்களே வீவக வீடுகளில் வசிப்பவர்கள் என்று கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார்.
திரு லீ, புதன்கிழமை (அக்டோபர் 7) நாடாளுமன்றத்தில் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது இப்புள்ளிவிவரத்தை வெளியிட்டார்.
தொடக்கநிலை 1 பதிவு முறையில் இடம்பெறும் மாற்றங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விகளை முன்வைத்திருந்தனர்.
செப்டம்பரில் அறிவிக்கப்பட்ட மாற்றங்கள்
கடந்த செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி தொடக்கநிலை 1 பதிவு முறையில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன.
அந்த மாற்றங்களின்கீழ் 2027ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள அடுத்த பதிவு நடவடிக்கையின் ‘2C’ கட்டத்தில் பெரும்பாலான பள்ளிகள் 60 சிறாருக்கு இடங்களை ஒதுக்கும். தற்போது அந்த எண்ணிக்கை 40ஆக உள்ளது.
கட்டம் ‘2C’, சம்பந்தப்பட்ட பள்ளியுடன் ஏற்கெனவே தொடர்புகளைக் கொண்ட சிறாருக்கானது. அருகில் வசிப்போருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும், தேசிய அளவில் சராசரியாக இருப்பதைக் காட்டிலும் குறிப்பிடத்தக்க அளவு அரசாங்க வீடுகள் குறைவாக இருக்கும் குடியிருப்பு வட்டாரங்களில் உள்ள 12 பள்ளிகள் இரண்டு கிலோமீட்டருக்கும் அதிக தொலைவில் இருக்கும் சிறாருக்கு இடங்களை ஒதுக்கும். மேலும் பலதரப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு வாய்ப்பளிப்பது இந்நடவடிக்கையின் நோக்கம்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
அந்த 12 பள்ளிகள் தங்களுக்கிடையே ஒதுக்கப்பட்டுள்ள 60 இடங்களைப் பகிர்ந்துகொள்ளும். முந்தைய பதிவு நடவடிக்கைக் கட்டங்களில் மிச்சமுள்ள இடங்களையும் அவை சேர்த்துக்கொள்ளும்.
அந்த இடங்கள் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்படும். ஒன்றில் இடம்பெறும் இடங்கள் பள்ளிக்கு இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்குள் வசிப்போருக்கானவை. எஞ்சிய பாதி அதற்கும் அப்பால் வசிப்பவர்களுக்கானவை.
தற்போதைக்கு அந்த இரு பிரிவு அணுகுமுறையை, பள்ளியின் இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் 40 விழுக்காட்டுக்கும் குறைவான அரசாங்க வீடுகள் இருக்கும் குடியிருப்புப் பகுதிகளில் செயல்படுத்த கல்வி அமைச்சு முடிவெடுத்துள்ளதாக திரு லீ செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் கேள்வி
மவுன்ட்பேட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் கோ செ கீ உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு திரு லீ பதிலளித்தார். இரு பிரிவு முறை, பள்ளிக்கு அருகே வசிக்கும் மாணவர்களின் வாய்ப்புகளைப் பாதிக்கக்கூடுமா என்று திருவாட்டி கோ கேட்டார்.
அவரின் தொகுதியில் உள்ள ஒரே தொடக்கப் பள்ளி கோங் ஹுவா பள்ளி. அங்கு இருக்கும் இடங்களுக்கும் மேலான பதிவுகள் சேர்வதுண்டு. அதனால் கவலையடைந்த பெற்றோர் பலரிடம் தாம் பேசியதாக அவர் சொன்னார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் லீ, பதிவு நடவடிக்கையின் கட்டம் ‘2C’யில் பள்ளியில் ஒதுக்கப்படும் இடங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிப்பது, கோங் ஹுவா போன்ற பள்ளிக்கு அருகே வசிப்பவர்களுக்குக் கூடுதல் வாய்ப்புகளை அளிப்பதற்காகவே என்றார்.
இரு பிரிவு பதிவு முறையில் தஞ்சோங் காத்தோங் தொடக்கப் பள்ளி, தாவ் நான் தொடக்கப் பள்ளி, சிஎச்ஐஜே காத்தோங் தொடக்கப் பள்ளி, நீ ஆன் தொடக்கப்பள்ளி உள்ளிட்டவையும் அடங்கும்.