Cinema
October 01, 2026 12:03 PM
அம்மா, அக்கா, பெண் குழந்தைகள், தங்கைகளுக்கு கட்டணமில்லா வெற்றிப் பயணம் திட்டம்; முதல்வர் விஜய் பெருமிதம்
சென்னை: மகளிருக்கான விரிவுப்படுத்தப்பட்ட கட்டணமில்லா பஸ் பயண திட்டமான வெற்றி பயணம் திட்டத்தை முதல்வர் விஜய் நாளை (அக்., 2) துவங்கி வைக்கிறார்.
இது குறித்து முதல்வர் விஜய் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அவர், ''தமிழகத்தில் மகளிரான நம் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், பெண் குழந்தைகள் மற்றும் திருநர் அனைவருக்கும் கட்டணமில்லா வெற்றிப் பயணம் திட்டம் நாளை அக்டோபர் 2 முதல்'' என பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
இத்திட்டத்தின் மூலம் தினமும் 84.32 லட்சம் பெண் பயணிகள் பயனடைவார்கள்; மாநிலம் முழுவதும் தமிழக மகளிருக்கான எளிதில் அணுகக்கூடிய பொதுப் போக்குவரத்து வசதி பெருமளவில் கிடைக்கும்.