Dorothy Day 6 Box Office
சென்னை: கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் டோரதி கடந்த மாதம் 25ஆம் தேதி ரிலீஸானது. இளையராஜா இசையமைத்திருந்தார். படத்துக்கு பாராட்டு கிடைத்தாலும்; அதே அளவுக்கு எதிர்ப்புகளும் கிளம்பின. இந்நிலையில் அதன் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். அவர் இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் டோரதி படத்தில் நடித்திருக்கிறார். அவர் நடித்திருந்தாலும் அவர் படத்தில் லீடு ரோல் கிடையாது. மாறாக ரிஷிகாந்த்தும், சனந்த்தும்தான் அந்த ரோலை செய்திருக்கிறார்கள். இப்படத்துக்கு முன்னதாக ரிஷி நடித்த மொத ராத்திரி திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருந்தது. எனவே இதுவும் தனக்கு பெரிய வெற்றியை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார்.
படத்துக்கு ஹைப்: அதுமட்டுமின்றி இளையராஜா இசையமைப்பில் உருவான பாடல்கள், அனுராக் காஷ்யப், தனுஷின் ரிலீஸுக்கு முந்தைய விமர்சனம், கனடாவின் டொரோன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் ரசிகர்களின் கைத்தட்டல்கள் என படத்துக்கு எக்கச்சக்க ஹைப் இருந்தது. இப்படிப்பட்ட சூழலில்தான் கடந்த மாதம் 25ஆம் தேதி தியேட்டர்களில் அந்தப் படமானது ரிலீஸானது. ரசிகர்களும் ஆவலோடு படத்துக்கு சென்று பார்த்தார்கள்.
ட்விஸ்ட் வைத்த கார்த்திக்: ட்ரெய்லரை பார்த்து முன்முடிவோடுதான் ரசிகர்கள் தியேட்டருக்குள் சென்றார்கள். அதாவது சனந்த்தும், ரிஷியும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள்; அவர்களது வாழ்க்கைக்குள் கீர்த்தி சுரேஷ் வந்துவிடுகிறார்; பிறகு என்ன நடக்கும் என்பதே கதை என்றுதான் நினைத்து சென்றார்கள். ஆனால் அங்கே கார்த்திக் சுப்புராஜை மொத்தமாக வேறு ஒரு விஷயத்தை பேசியிருக்கிறார். அதாவது திருநர்கள் குறித்தும், சனந்த் திருநங்கை மாறுவது தொடர்பாகவும் எடுத்து வைத்திருந்தார்.
பாராட்டும், சர்ச்சையும்: முக்கியமாக பெண்ணாக மாறிய சனந்த்தை க்ளைமேக்ஸில் ரிஷிகாந்த் அடிக்கும் கிஸ்ஸும், அவர்களது காதலையும் பார்த்த ரசிகர்களுக்கு ஷாக் கலந்த சர்ப்ரைஸ்தான் கிடைத்தது. பலரும் படத்தை பாராட்டவே செய்தார்கள். ஆனால் கலாசார காவலர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் மட்டும்தான் இந்தப் படத்தை எதிர்த்து வருகிறார்கள். எது எப்படியோ இந்தியாவின் தலைசிறந்த படங்களை பட்டியலிட்டால் கண்டிப்பாக டோரதி இடம்பெறும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
வசூல் நிலவரம்: விமர்சன ரீதியாக க்ளிக்காகிவிட்ட அப்படம் வசூலிலும் நல்ல நிலைமையில்தான் இருந்தது. முதல் சில நாட்களில் 1.50 கோடிக்கு குறையாமல் இருந்த அதன் வசூல்; கடந்த சில நாட்களாக டல்லடிக்க தொடங்கிவிட்டதாக Sacnilk இணையதளம் குறிப்பிட்டிருக்கிறது. அந்த இணையதளம் வெளியிட்டிருக்கும் தரவுகள்படி ஆறாவது நாளான நேற்று அப்படம் 83 லட்சம் ரூபாய் மட்டும்தான் வசூலித்திருக்கிறதாம். மொத்தம் இதுவரை ஆறு கோடியே 8 லட்சம் ரூபாயை வசூலித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.