📅 Tuesday, 06 October 2026 IST | புரட்டாசி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 06, 2026 09:01 AM

யாரும்மா நீ.. ஜெயிலர் 2வில் இப்படி சண்டை போடுற?.. அழகுரதி அக்னிஹோத்ரி அபிக்‌ஷா போர்வால் பற்றி தெரியுமா?

யாரும்மா நீ.. ஜெயிலர் 2வில் இப்படி சண்டை போடுற?.. அழகுரதி அக்னிஹோத்ரி அபிக்‌ஷா போர்வால் பற்றி தெரியுமா?

சென்னை: 2015ம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா ஃபைனலிஸ்ட் ஆகி பின்னர், 2017ம் ஆண்டு மிஸ் திவா அழகி பட்டம் வென்றவர் தான் ஜெயிலர் 2 டிரெய்லரில் ரசிகர்களை சண்டைக் காட்சிகளில் மிரட்டிவிட்டு இணையத்தில் தேட வைத்த அபிக்‌ஷா போர்வால் (Apeksha Porwal).

அழகுன்னா அழகு அப்படியொரு அழகு இருக்கும் அபிக்‌ஷா போர்வால் மிருணாள் தாக்கூர் இளம் வயதில் இருந்ததை போல இருக்கிறாரே என ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ஆனால், இவருக்கே 33 வயதாகிறது.

அழகியாக மட்டுமில்லாமல் மார்ஷியல் ஆர்ட்ஸ் தெரிந்த ஆக்‌ஷன் நாயகியாக இருந்ததால் தான் நெல்சன் ஜெயிலர் 2 படத்தில் அபிக்‌ஷா போர்வாலுக்கு அப்படியொரு ஆக்‌ஷன் காட்சிகளை வைத்துள்ளார். இவர் இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா ஆளா? அல்லது ஹ்ரித்திக் ரோஷன் அனுப்பி ரஜினிகாந்தை காப்பாற்ற வருகிறாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

யாரு இந்த அபிக்‌ஷா போர்வால்: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படம் வரும் அக்டோபர் 15ம் தேதி திரைக்கு வருகிறது. அந்த படத்தின் அட்டகாசமான டிரெய்லர் நேற்று வெளியானது. அதை பார்த்த ரசிகர்கள் அந்த படத்தில் வரும் வித்யா பாலனை சீண்டாமல் இன்னொரு லேடி நடிகையை தேடத் தொடங்கியுள்ளனர். அவர் வேறு யாருமில்லை மிஸ் திவா 2017 டைட்டில் வென்ற பாலிவுட் நடிகை அபிக்‌ஷா போர்வால் தான். சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியான Undekhi வெப்சீரிஸில் மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்திய அபிக்‌ஷா போர்வாலை ஜெயிலர் 2வுக்காக நெல்சன் அலேக்காக தூக்கிக் கொண்டு வந்துள்ளார்.

சகலகலாவல்லி: கிக் பாக்ஸிங், மார்ஷியல் ஆர்ட்ஸ் மட்டுமின்றி கதக் நடனக் கலைஞராகவும் கலக்கி வருகிறார் அபிக்‌ஷா போர்வால். ஹனிமூன் போட்டோகிராஃபர், சால்ட் சிட்டி, பதாய் தோ உள்ளிட்ட இந்தி படங்களிலும் ஓடிடி தொடர்களிலும் நடித்து இந்தி ரசிகர்களை கவர்ந்த அபிக்‌ஷா போர்வால் ஜெயிலர் 2 படத்துக்குப் பிறகு இந்திய ரசிகர்களையும் கவர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரெண்டிங்கில் ஜெயிலர் 2: இந்த முறை ஜெயிலர் 2 இசை வெளியீட்டு விழா ரேவ் பார்ட்டியாக அனிருத் தலைமையில் நடத்தப்பட்டு ஆல்பம் மொத்தமும் வெளியானது. ஆனால், சூப்பர் ஸ்டார் மாஸ் பேச்சு இல்லையே என ரசிகர்கள் ஏமாந்துப் போனாலும், எதிர்பார்த்ததை போலவே ஜெயிலர் 2 டிரெய்லர் டிரெண்டிங்கில் தெறிக்கிறது. பீஸ்ட் படத்தில் விஜய் பிரத்யேக பேட்டி கொடுத்தது போல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - நெல்சன் பேட்டியாவது வருமா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.