📅 Tuesday, 06 October 2026 IST | புரட்டாசி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 06, 2026 03:03 PM

“திமுக வெற்றிபெற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு”

“திமுக வெற்றிபெற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு”

திமுக வேட்பாளர் சுகன்யா

மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய தொகு​தி​களில் இடைத்​தேர்​தல் வாக்​குப்​ப​திவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடை​பெறவுள்​ளது. தொடர்ந்து வாக்​கு​கள் வரும் 9-ம் தேதி எண்​ணப்​பட்டு முடிவு​கள் அறிவிக்​கப்பட உள்​ளன.

தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் சத்யபாமா போட்டியிடுகிறார். திமுக சார்பில் சுகன்யாவும், அதிமுக சார்பில் பானுமதியும், நாதக சார்பில் கார்த்திகாவும், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் லட்சுமணனும் தாராபுரத்தில் போட்டியிடுகின்றனர்.

திமுக தலைவர்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த திமுக நிர்வாகிகள் எனக்காக தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டனர். கடந்த 3 மாதங்களாக தவெக ஆட்சியில் எதுவுமே செய்யவில்லை. 2021ல் எங்கள் ஆட்சியின் 100 நாள் சாதனைகளையும், இப்போதைய ஆட்சியின் 100 நாள் சாதனைகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள், அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை.

திராவிட மாடல் ஆட்சி மீண்டும் வந்திடாதா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் வந்துவிட்டது. அதனால் எங்களுக்கு வெற்றி நிச்சயம். தவெக வேட்பாளர்களை எல்லா பக்கமும் புறக்கணிக்கிறார்கள். ” என்றார்.