📅 Tuesday, 06 October 2026 IST | புரட்டாசி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 06, 2026 10:01 AM

விஜய்க்கு அடுத்து யாரு?.. இப்போதே சீட் போடும் தனுஷ்

விஜய்க்கு அடுத்து யாரு?.. இப்போதே சீட் போடும் தனுஷ்

சென்னை: தமிழ் சினிமாவின் எதிர்காலத்தை மட்டுமின்றி தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் நடிகர்களே தொடர்ந்து தீர்மானிக்கும் நிலையில் உள்ளார்களே என்கிற கேள்வி எழுந்தாலும், மற்ற துறையில் இருப்பவர்கள் இந்தளவுக்கான முயற்சிகளில் ஈடுபடாமல் விடும் கேப் தான் இவர்களுக்கான அஸ்திவாரம் என்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது.

ஜாலியாக நடித்துக் கொண்டு கோடிகளில் பணம் வாங்கிக் கொண்டு அப்படியே வாழ்க்கையை கொண்டாட்டமாக வாழ்ந்து விடலாம் என்பதை தாண்டி ஒரு சில பிரபலங்கள் மக்களுக்காக கஷ்டப்படவும் அவமானங்களையும் திட்டுக்களையும் வாங்கவும் தயாராகி வரும் போது தான் ஒரு தலைவனாக உருவெடுக்க முடியும்.

எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு ரஜினிகாந்தை பலரும் அந்த இடத்தில் எதிர்பார்த்த நிலையில், அவர் விட்ட கேப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு மக்களை நம்பி களத்தில் இறங்கிய தளபதி விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதல் முயற்சியிலேயே சிக்சர் அடித்து சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளார்.

விஜய் காட்டிய வழி: 70 ஆண்டு கட்சி என சொல்லிக் கொள்ளும் திமுக, 50 ஆண்டு கட்சியான அதிமுகவில் எல்லாம் ஸ்ட்ராங்கான மக்களை கவரும் தலைவர்கள் இல்லை என்பதை வெட்ட வெளிச்சமாக காட்டி அடுத்த தலைமுறையினர் நடிகர்களுக்கு அரசியல் ரூட்டை அழகாக போட்டுக் கொடுத்துள்ளார் விஜய் என்கின்றனர். விஜய்க்கு அடுத்து தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்கிற ஆசை குறிப்பாக 2 நடிகர்களுக்கு மட்டுமே இப்போதைக்கு உள்ளது என்கின்றனர்.

தனுஷ் தயார்: வேலையில்லா பட்டதாரி தனுஷே அரசியலுக்கு வந்துவிட்டார் என கனிமொழியே பேசும் அளவுக்கு தனுஷ் அரசியல் பாதையை அழகாக போட்டு தன்னை அதற்காக தயார்ப்படுத்தி வருகிறார் என்பதை தெளிவாக காட்டி வருகிறார். தொடர்ந்து வேட்டி, சட்டை அணிந்துக் கொண்டு மக்கள் நாயகனாக மாறியுள்ள தனுஷ் தனது ரசிகர் படையையும் பலப்படுத்தி வருகிறார்.

சிவகார்த்திகேயனுக்கும் சிஎம் கனவு: கோலிவுட்டை விட்டு விஜய் அரசியல் பக்கம் செல்லும் போது துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் தான் கொடுத்துச் சென்றார். அடுத்து விஜய் பிரதர் ரேஸில் குதித்தால், தமிழ்நாட்டின் சிஎம் பதவிக்கு சரியான ஆளாக தான் தயாராகி விட வேண்டும் என்கிற நோக்கத்துடன் சிவகார்த்திகேயன் செயல்பட்டு வருகிறாரா என்கிற கேள்விகள் கிளம்பி உள்ளன. நடிகர்கள், இளைஞர்கள் என யார் வேண்டுமானால் அரசியல் களத்தில் களமிறங்கலாம் என்றும் மக்களுக்குத் தேவையான நல்லாட்சியை இந்த நபர் கொடுப்பார் என மக்கள் நினைத்தால் மட்டுமே அவர்களுக்கு அந்த வாய்ப்பு தரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.