📅 Tuesday, 06 October 2026 IST | புரட்டாசி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 06, 2026 08:03 AM

முதல்வர் விஜய் தாக்கல் செய்த வேட்பு மனு மீதான குற்றச்சாட்டில் எந்த ஆதாரமும் இல்லை

முதல்வர் விஜய் தாக்கல் செய்த வேட்பு மனு மீதான குற்றச்சாட்டில் எந்த ஆதாரமும் இல்லை

முதல்வர் விஜய் தாக்கல் செய்த வேட்பு மனு மீதான குற்றச்சாட்டில் எந்த ஆதாரமும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் வாதம்

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் ஒரே பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் எந்த முரண்பாடுகளும் இல்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Published : October 5, 2026 at 8:36 PM IST

சென்னை: பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் சொத்து விவரங்களை முழுமையாக தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்று முதலமைச்சர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தவெக தலைவர் ஜோசப் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். அதில் பெரம்பூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.டி சேகரை விட 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் வெற்றி பெற்றார். இதனையடுத்து திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

ஆனால் பெரம்பூரில் அவரது தேர்தல் வெற்றியை எதிர்த்து வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் மற்றும் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் ஆகியோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளை நிராகரிக்கக் கோரி முதலமைச்சர் விஜய் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணையானது இன்று நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு நடைபெற்றது.

அப்போது, முதலமைச்சர் விஜய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், உச்ச நீதிமன்ற தீர்ப்புகள், சட்ட ஆணைய பரிந்துரைகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி வாதிட்டார். மேலும் வேட்புமனுவில் விஜய் தனது சொத்து விவரங்களை தெரிவிக்கவில்லை என்ற குற்றசாட்டுகளில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும் வாதிட்டார்.

தொடர்ந்து, பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் ஒரே பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் எந்த முரண்பாடுகளும் இல்லை எனவும் தெரிவித்த நிலையில், முதலமைச்சர் விஜய் தரப்பில் வாதம் முடிவடையாததால், தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரிய மனுக்களின் மீதான விசாரணையை நீதிபதி நாளை (செப் 06) ஒத்தி வைத்தார்.