📅 Sunday, 11 October 2026 IST | புரட்டாசி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 11, 2026 12:04 PM

டில்லியில் கட்டுப்பாடுகள் விதித்ததை எதிர்த்த வழக்கு; இன்று விடுமுறையில் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

டில்லியில் கட்டுப்பாடுகள் விதித்ததை எதிர்த்த வழக்கு; இன்று விடுமுறையில் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

புதுடில்லி: தேர்தல் ஆணையருக்கு எதிராக கரப்பான் அமைப்பினர் டில்லியில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இந்தப் போராட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக, டில்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. முக்கிய சாலைகளில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டன. இணையதள சேவை முடக்கப்பட்டன.

இதை கவனத்தில் எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், மெட்ரோ ரயில் நிலையங்களை மக்கள் பாதிக்காத வகையில் திறக்க அறிவுறுத்தியிருந்தது. ஆனால், போராட்டக்காரர்கள் தடையை மீறி வந்ததால், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை டில்லி அரசு நிறைவேற்றவில்லை.

போராட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் விதிக்கப்பட்ட இந்தத் தடையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் சைலேந்திர மணி திரிபாதி அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அரசியல் தலைவர்களை கைது செய்யப்பட்டதை எதிர்த்து திரிணமுல் காங்கிரஸ் எம்பியும், மூத்த வழக்கறிஞருமான மேனகா குருசுவாமியும் மனு தாக்கல் செய்தார்.

இந்த அவமதிப்பு வழக்கு மற்றும் கைதுக்கு எதிரான மனுவை விசாரிக்க, உச்சநீதிமன்ற சிறப்பு அமர்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (அக்., 11) கூடுகிறது. நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் வி. மோகனா அடங்கிய சிறப்பு அமர்வு இந்த வழக்குகளை விசாரிக்கிறது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு பொதுவிடுமுறையாகும்.