📅 Sunday, 11 October 2026 IST | புரட்டாசி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 11, 2026 01:04 PM

இடைத்தேர்தல் முடிவுகள் திமுக

இடைத்தேர்தல் முடிவுகள் திமுக

இடைத்தேர்தல் முடிவுகள் திமுக-வின் வலிமையை உணர்த்தியுள்ளது; பரந்தாமன் பேட்டி..

சென்னை: இடைத்தேர்தல் முடிவுகள் குறித்தும், தலைமைச்செயலகத்தில் முதல்வர் அறையில் விஜய் மற்றும் அமைச்சர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது குறித்தும், மதுராந்தகத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமன் செய்தியாளர்களிடம் பேசினார்.

தேர்தல் களத்தில் வெற்றி, தோல்வி என்பது இயற்கை. திமுக காணாத வெற்றியோ அல்லது தோல்வியோ கிடையாது. ஆனால், வெற்றி பெற்ற மமதையில் முதலமைச்சரின் அறையில் தவெக-வின் வெற்றியை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கொண்டாடியது அநாகரீகத்தின் உச்சம் என்று பரந்தாமன் சாடியுள்ளார். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் முதலமைச்சர், அரசின் தலைமையிடமான தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் அறையில், இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியின் களிப்பை கொண்டாடியது அரசியல் அரணற்ற தன்மை. இளைய தலைமுறையினருக்கு தவறான அரசியலை தவெக கற்றுக்கொடுக்கிறது என்றும் பரந்தாமன் விமர்சித்துள்ளார்.

எல்லா நிலைகளிலும், ஒரே சீரான நிலையில் இருந்து அரசியல் செய்த பேரியக்கம்தான் திமுக என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். திமுகவின் வாக்கு வங்கி எப்போதும் வலிமையாகவே உள்ளது என்றும், இடைத்தேர்தல் முடிவுகள் அதை நிரூபித்து உள்ளன என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், இந்த இடைத்தேர்தல் என்பது தமிழ்நாட்டில் திமுகவின் வலிமையை உணர்த்தியிருக்கக்கூடிய தேர்தல். மக்களுக்காக என்றைக்கும் களத்தில் நிற்கக்கூடிய இயக்கம் திமுக என்பதை மக்கள் நன்றாக புரிந்து வைத்ள்ளார்கள். இந்த தேர்தலில் திமுக-வுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் என்றார். ஆட்சி, அதிகார பலத்தை வைத்து இந்த இடைத்தேர்தலில் தவெக-வினர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். திமுக-வை போன்று வெற்றி பெற்ற இயக்கமும் இல்லை, தோல்வியை கண்ட இயக்கமும் இல்லை என்றார்.