📅 Thursday, 08 October 2026 IST | புரட்டாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 08, 2026 04:04 PM

தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை

தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை

தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை

டெல்லி: தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது.

காவிரியில் இருந்து வினாடிக்கு 3,000 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு நீர் திறக்க வேண்டும் என்று இன்று காலை 11:30 மணிக்கு நடைபெற்ற கூட்டத்தில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.

தமிழ்நாடு 12,000 கனஅடி நீர் திறந்துவிட கோரிய நிலையில் அவ்வளவு நீர் திறந்து விட முடியாது என்று ஒரு கருத்தை கர்நாடக அரசு திட்டவட்டமாக ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்துள்ளது. ஒழுங்காற்று குழு பரிந்துரைத்த நிலையில் இன்று பிற்பகல் காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது. தங்களது அணைகளில் தற்போது 40 டிஎம்சி நீர் மட்டுமே உள்ளது என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.