📅 Thursday, 08 October 2026 IST | புரட்டாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 08, 2026 06:03 PM

திருவான்மியூர் டைடல் பார்க் அருகே சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்

திருவான்மியூர் டைடல் பார்க் அருகே சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்

சென்னை திருவான்மியூர் டைடல் பார்க் அருகே சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கார் கவிழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஓ.எம்.ஆர். சாலை

அந்த கார் டைடல் பார்க் சிக்னல் பகுதியில் நின்றது. அப்போது கார் திடீரென சாலையில் கீழே இறங்குவது போன்ற உணர்வு அவர்களுக்கு ஏற்பட்டது.

அடுத்த ஒரு சில நிமிடத்தில் கார் மெதுவாக தரைக்குள் புதைந்து செல்வதை அறிந்த டிரைவரும், அந்த பெண்ணும் கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடினார்கள்.

இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்தடுத்து வந்த வாகனங்கள் நின்றன. கார் அவர்கள் கண் முன்பே 4 அடி ஆழம் புதைந்தது. உடனடியாக போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து அந்தப் பகுதியில் வாகன போக்குவரத்தை மாற்றி விட்டனர். தொடர்ந்து மீட்பு வாகன மூலம் சாலையில் புதைந்த காரை மீட்கும் பணி நடைபெற்றது.

சாலையில் பள்ளம்

ஒரு மணி நேரத்தில் அந்த கார் சாலை பள்ளத்தில் இருந்து வெளியே மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். சாலையில் நின்று கொண்டிருந்த வாகனம் திடீரென பள்ளத்தில் புதைந்ததை பார்த்து டிரைவர் பிரவீன் குமாரும், மீனா கிருஷ்ண மூர்த்தியும் அதிர்ச்சியில் உறைந்தனர். பெரிய விபத்தில் இருந்து அவர்கள் தப்பினர்.

இதுகுறித்து திருவான்மியூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் சப் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்கள். சாலையில் திடீரென எப்படி பள்ளம் உருவானது, இதற்கான காரணம் என்ன என்பது குறித்து அதிகாரிகள் விசாரிக்கிறார்கள். அந்தப் பகுதியில் மெட்ரோ ரெயில் பணி நடைபெறுவதால் அதற்கான பள்ளங்கள் தோண்டியதால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.