📅 Thursday, 08 October 2026 IST | புரட்டாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 08, 2026 07:03 PM

தேர்தல் கமிஷனர்கள் நியமனத்தில் விதிகள் பின்பற்றவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு

தேர்தல் கமிஷனர்கள் நியமனத்தில் விதிகள் பின்பற்றவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு

புதுடில்லி:

எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் ,'' தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார், தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி நியமனத்தில் உரிய சட்ட விதிகளை பினப்பற்றவில்லை.

தேர்தல் கமிஷனர்கள் நியமனம் செய்வதற்கு முன்னர், ஒவ்வொரு காலிப்பணியிடத்திற்கும் ஐந்து பெயர் கொண்ட பட்டியல் தயாரிக்க வேண்டும். ஆனால், இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. இந்த மூன்று அதிகாரிகளின் தகுதியும் கேள்விக்கு உள்ளாக்குப்பட்டு இருக்கிறது.

மூவரில் எவரும் இதற்கு முன்னர் தேர்தல் தொடர்பான பணிகளை கையாண்டதில்லை. 2023ம் ஆண்டு ( நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) குறித்த சட்டத்தில் உள்ள தகுதிகளை அவர்கள் பூர்த்தி செய்யவில்லை.

இவர்கள் தேர்வுக்கான நடைமுறை குறித்து சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்து இருந்தது. இப்பதவிக்கான பரிசீலனையில் உள்ள பெயர்கள், தேர்வுக்குழுவினரின் பரிசீலனைக்கு அனுப்பபட வேண்டும்,'' எனக்கூறப்பட்டது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.