📅 Thursday, 08 October 2026 IST | புரட்டாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 08, 2026 01:03 AM

தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: ராகுல் காந்தி உறுதி

தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: ராகுல் காந்தி உறுதி

புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகும் வரையில் தங்களது போராட்டம் தொடரும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உறுதிபட தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் எம்.பி பிரியங்கா காந்தி மற்றும் இண்டியா கூட்டணி கட்சியினர் புதன்கிழமை அன்று முயற்சி செய்தனர். அவர்களை தடுத்த போலீஸார், கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

தேர்தல் ஆணைய முடிவுகள் மற்றும் எஸ்ஐஆர் நடவடிக்கை உள்ளிட்டவற்றை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தன்னிச்சையாக மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு எதிர்க்கட்சிகள், மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், அதை கண்டித்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இண்டியா கூட்டணி கட்சியினர் செவ்வாய்க்கிழமை அன்று டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி பேரணி மேற்கொண்டனர். அவர்களை தேர்தல் ஆணைய அலுவலகத்துக்குள் அனுமதிக்காமல் போலீஸார் தடுத்தனர்.

இதையடுத்து ஆகாசவாணி வளாகத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை சந்திக்க வேண்டும் என தெரிவித்தனர். அந்த சூழலில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இண்டியா கூட்டணி கட்சியினர் புதன்கிழமை அன்று ஜந்தர் மந்தர் பகுதியியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இந்த சூழலில் அவர்களை தடுத்த போலீஸார், கைது செய்தனர். இதில் ராகுல் மற்றும் பிரியங்காவும் கைதாகினர். பின்னர் அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

இத்தகைய சூழலில் ராகுல் காந்தி கூறியதாவது: “ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை நாங்கள் போராட்டத்தை நிறுத்தப்போவது இல்லை. தேசத்தின் புனிதம் மிக்க ஒன்றை காக்கும் நோக்கில் இந்த போராட்டம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷாவால் எங்களை தடுக்க முடியாது” என்று தெரிவித்தார்.