📅 Thursday, 08 October 2026 IST | புரட்டாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 08, 2026 04:03 AM

2 பெக் போட்டுட்டு காலில் விழுறேன்.. டோரதி வெற்றி விழாவில் மிஷ்கின் செய்த அலப்பறை!

2 பெக் போட்டுட்டு காலில் விழுறேன்.. டோரதி வெற்றி விழாவில் மிஷ்கின் செய்த அலப்பறை!

சென்னை: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த 25-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானத் திரைப்படம் டோரதி. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையில் படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

இப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய இயக்குநர் மிஸ்கின் படத்தை வெகுவாக பாராட்டி பேசினார். திருநங்கைகள் பற்றி இத்தனை நாட்களாக நமக்கு தெரியாமல் இருந்தது மிகப்பெரிய அசிங்கம், கேவலம். இந்த தூக்கும் சமூதாயத்தை கார்த்திக் சுப்புராஜ் என்கிற மகா கலைஞன் சுத்தியலால் அடித்து எழுப்பி இருக்கிறார்.இதற்கு முன்பு கார்த்திக் சுப்புராஜின் முந்தைய படமான (ரெட்ரோ) படத்தை பார்த்தேன். அது ஒரு மொக்கையான படம். கார்த்தியின் படங்களில் நான் முதலில் பார்த்தது அந்த படத்தை தான். அந்த படத்தில் நீண்ட நடனக் காட்சி, சண்டை எல்லாம் இருந்தது. உண்மையில் அது மிகவும் மொக்கையாக இருந்தது. அதை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

மிஷ்கின் பேச்சு: கார்த்தியின் படங்கள் நன்றாக இருக்கும் என்று என் உதவியாளர்களே சொல்வார்கள். ஆனால், இல்லை வேண்டாம், எனக்கு நிறைய படிக்க வேண்டி இருக்கு, நிறைய விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டி இருக்கு. நான் தியேட்டருக்கு செல்வது எண்டர்டேமென்டுக்காக இல்ல. நான் தியேட்டருக்கு செல்வது கடவுளை கும்பிடுவதற்காகத்தான் செல்வேன். இந்த படத்திலும் நான் கடவுளை கும்பிட்டுவிட்டேன்.

காலில் முத்தமிடுவேன்: டோரதி படத்தை பார்த்துவிட்டு உடனடியாக நான் ஒரு வீடியோ போட்டேன். அந்த வீடியோவில் இளையராஜாவின் காலை முத்தமிட்டு இருக்கிறேன். இளையராஜாவுக்கு அடுத்து நான் கார்த்திக் சுப்பராஜ் காலை முத்தமிடுவேன் என சொல்லி இருந்தேன். ஒரு மகா கலைஞனை பாராட்டும்போது, அதை இன்ஸ்டால்மென்டில் பாராட்ட முடியாது. முழுமையாகத்தான் பாராட்ட வேண்டும். அந்த அளவுக்கு ஒரு படைப்பை பார்த்தவுடன் அவரது காலில் விழுந்துவிட வேண்டும் எனக்கு தோன்றுகிறது. இப்போது கூட, நான் அவன் காலில் விழுந்துவிடுவேன், அது ட்ராமன்டிக்காக மாறிவிடும். இன்று இரவு கார்த்திக் சுப்புராஜ் ஆபீசுக்கு வருகிறார். அப்போது இரண்டு பெக் போட்டுவிட்டு, அவருடைய காலில் விழுந்துவிடுகிறேன் என மிஷ்கின் அந்த மேடையில் பேசி உள்ளார்.