📅 Saturday, 26 September 2026 IST | புரட்டாசி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 26, 2026 03:03 AM

திமுக வேட்பாளரை ஆதரித்து கனிமொழி, உதயநிதி, பிரேமலதா பிரசாரம்

திமுக வேட்பாளரை ஆதரித்து கனிமொழி, உதயநிதி, பிரேமலதா பிரசாரம்

திமுக வேட்பாளரை ஆதரித்து கனிமொழி, உதயநிதி, பிரேமலதா பிரசாரம்

சென்னை: திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளரான ஐ.பரந்தாமனை ஆதரித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 30ம் தேதி மாலை 4 மணிக்கு கருங்குழி மகளிர் சந்திப்பு, மாலை 5 மணி- மதுராந்தகம் (கடப்பேரி), மாலை 6 மணி சரவம்பாக்கத்தில் வேன் பிரசாரம் செய்கிறார். மாலை 7 மணி- பெரும்பேர்கண்டிகையில் மகளிர் கூட்டம், இரவு 8 மணி- கீழ்அத்திவாக்கம் கூட்டுச்சாலையில் வேன் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இதேபோல திமுக வேட்பாளர் ஐ.பரந்தாமனை ஆதரித்து திமுக இளைஞர் அணிச் செயலாளர்- எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வரும் 27ம் தேதி தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அன்றைய தினம் மாலை 4 மணி மதுராந்தகத்திலும், மாலை 5 மணி அச்சிறுப்பாக்கம், மாலை 6 மணி ஒரத்தியிலும், மாலை 7 மணிக்கு கருங்குழியிலும் வேன் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இரவு 8 மணி-மாமண்டூரில் வேன் பிரசாரம் செய்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சியின் திமுக வேட்பாளரான ஐ.பரந்தாமனை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா எம்எல்ஏ வரும் 28ம் தேதி தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 28ம் தேதி அன்று மாலை 4 மணி-நெல்வாய் கூட்டுச் சாலையிலும், மாலை 5 மணி-எல்.எண்டத்தூரில் வேன் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். மாலை 6 மணி எலப்பாக்கம் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.