📅 Saturday, 26 September 2026 IST | புரட்டாசி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 26, 2026 03:03 AM

ஜெம் வீரமணி பாலியல் வழக்கை அரசியலாக்க வேண்டாம்: சமூக பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள் என நீதிபதி அறிவுறுத்தல்

ஜெம் வீரமணி பாலியல் வழக்கை அரசியலாக்க வேண்டாம்: சமூக பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள் என நீதிபதி அறிவுறுத்தல்

சென்னை: சிறுமிகள் சம்​பந்​தப்​பட்ட ஜெம் வீரமணி பாலியல் வழக்கை இருதரப்​பும் மாறி, மாறி ஒரு​வர் மீது ஒரு​வர் குற்​றம் சாட்டி அரசி​ய​லாக்க வேண்​டாம். அது குற்​ற​வாளி​கள் தப்​பிக்க வழி​வகுத்​து​விடும். சமூக பொறுப்​போடு அனை​வரும் நடந்து கொள்​ளுங்​கள் என சென்னை உயர் நீதி​மன்ற நீதிபதி கே.ஜி.​தில​கவதி அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

சிறுமிகளை பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக ஜெம் கிரானைட் வீரமணிக்கு எதி​ரான வழக்​கில் உரிய நடவடிக்கை எடுக்​காமல் முந்​தைய திமுக அரசு குற்​ற​வாளி​களை தப்​பிக்க விட்​டு​விட்​ட​தாக தமிழக அமைச்​சர்​கள் நிர்​மல்​கு​மார் மற்​றும் ஆதவ் அர்​ஜூனா ஆகியோர் கருத்து தெரி​வித்​திருந்​தனர். இதே​போல தவெக தகவல் தொழில்​நுட்ப பிரி​வும், திமுக அரசுக்கு எதி​ராக குற்​றம் சாட்டி தனது சமூக வலை​தளப்​பக்​கத்​தில் பதி​விட்​டிருந்​தது.

தவெக அமைச்​சர்​களின் இந்த செயல், திமுக​வுக்கு களங்​கம் ஏற்​படுத்​தும் வகை​யில் உள்​ளது என்​றும், வீரமணிக்கு எதி​ரான பாலியல் வன்​கொடுமை வழக்​கில் முந்​தைய திமுக அரசு மீது குற்​றம் சாட்டி எந்​தவொரு கருத்​துக்​களை​யும் தெரிவிக்​கக்​கூ​டாது என அமைச்​சர்​கள் நிர்​மல்​கு​மார், ஆதவ் அர்​ஜூனா மற்​றும் தவெக தகவல் தொழில்​நுட்ப பிரிவுக்கு தடை விதிக்​கக்​கோரி திமுக பொதுச் செய​லா​ள​ரும், முன்​னாள் அமைச்​சரு​மான துரை​முரு​கன் தரப்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது.

அதில், ஜெம் வீரமணிக்கு எதி​ராக கடந்த 2025 அக்.6 அன்று புகார் வந்த மறு​நாளே திமுக ஆட்​சி​யில் வழக்​குப்​பதிவு செய்​யப்​பட்​டது. எந்த தலை​யீடும் இல்​லாமல், தாமதமின்றி நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. உண்மை நிலைக்கு மாறாக திமுக​வுக்கு களங்​கம் ஏற்​படுத்​தும் வகை​யில் அமைச்​சர்​கள் மற்​றும் ஆளுங்​கட்​சி​யின் தகவல் தொழில்​நுட்ப பிரிவு அவதூறான கருத்​துக்​களை பரப்பி வரு​கிறது.

எனவே தவெக அமைச்​சர்​களின் இந்த செயலுக்​காக ரூ. ஒரு கோடியே ஒரு லட்​சத்தை மான நஷ்டஈ​டாக திமுக​வுக்கு வழங்க அமைச்​சர்​கள் நிர்​மல்​கு​மார் மற்​றும் ஆதவ் அர்​ஜூ​னா, தவெக தகவல் தொழில்​நுட்ப பிரிவுக்கு உத்​தர​விட வேண்​டும். அத்​துடன் இதுதொடர்​பாக திமுக மீது குற்​றம் சாட்டி வெளி​யிடப்​பட்​டுள்ள பதிவு​கள் மற்​றும் வீடியோக்​களை நீக்க தவெக​வுக்​கும், சமூக வலைதள நிறு​வனங்​களுக்​கும் உத்​தர​விட வேண்​டும், எனக் கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கு நீதிபதி கே.ஜி.​தில​கவதி முன்​பாக நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது திமுக தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் ஜெ.ர​வீந்​திரன் ஆஜராகி, இதுதொடர்​பாக சம்​பந்​தப்​பட்ட மெட்​டா, யூடியூப், எக்ஸ் ஆகிய சமூக வலைதள நிறு​வனங்​களுக்கு எதி​ராக வழக்​குத்​தொடர அனு​மதி வழங்க வேண்​டுமென்​றார்.

தமிழக அமைச்​சர்​கள் தரப்​பில் ஆஜரான அரசு தலைமை வழக்​கறிஞர் விஜய் நாராயண், அமைச்​சர்​களுக்கு எதி​ராக வழக்கு தொடர வேண்​டுமென்​றால் முன்​கூட்​டியே நோட்​டீஸ் வழங்​கி​யிருக்க வேண்​டும். இந்த வழக்கு சமூக வலை​தளப்​ப​திவு​களை அடிப்​படை​யாக கொண்​டது. எனவே இந்த வழக்கு விசா​ரணைக்கு உகந்​தது அல்ல என்​ப​தால் தள்​ளு​படி செய்ய வேண்​டும், என்​றார்.

அதையடுத்து நீதிப​தி, இந்த வழக்கு தொடர்​பாக சம்​பந்​தப்​பட்ட அமைச்​சர்​கள், தவெக தொழில்​நுட்ப பிரிவு, சமூக வலைதள நிறுவனங்​கள் உள்​ளிட்​டோர் தரப்​பில் பதிலளிக்க உத்​தர​விட்டு விசா​ரணையை வரும் செப்​.28-க்கு தள்ளி வைத்​தார்.

அப்​போது நீதிபதி கே.ஜி.​தில​கவ​தி, “சிறுமிகள் சம்​பந்​தப்​பட்ட இந்த ஜெம் வீரமணி தொடர்​பான வழக்கை நாளிதழ்​களில் படிக்கும்​போதே மனம் பதறுகிறது. இந்த வழக்கு மிக​வும் தீவிரமானது. பாதிக்​கப்​பட்ட சிறுமிகள் பாது​காக்​கப்பட வேண்​டும். அனை​வருக்​கும் சமூக பொறுப்பு உள்​ளது. இந்த விவ​காரத்தை இருதரப்​பும் மாறி, மாறி ஒரு​வர் மீது ஒரு​வர் குற்​றம் சாட்டி அரசி​ய​லாக்க வேண்​டாம். அது வழக்கை நீர்த்​துப்​போகச் செய்து குற்​ற​வாளி​கள் தப்​பிக்க வழி​வகுத்து விடும். எனவே இருதரப்​பும் இந்த விவ​காரத்தை இத்​துடன் நிறுத்​திக் கொள்​ளுங்​கள். அரசு தலைமை வழக்​கறிஞரும், தி​முக தரப்பு மூத்த வழக்​கறிஞரும் உங்​களது தரப்​பினருக்கு இதுதொடர்​பாக அறி​வுறுத்​துங்​கள்​. இது என்​னுடைய தனிப்​பட்​ட கருத்​து” என்​று தெரிவித்​தார்​.