📅 Saturday, 26 September 2026 IST | புரட்டாசி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 26, 2026 04:03 AM

 மாணவிக்கு முத்தம் கொடுக்க முயன்ற ஆசிரியருக்கு 'காப்பு'

 மாணவிக்கு முத்தம் கொடுக்க முயன்ற ஆசிரியருக்கு 'காப்பு'

பென்னாகரம்: மாணவியை கட்டிப்பிடித்து, முத்தம் கொடுக்க முயன்ற ஆசிரியர் தங்கவேல், 48, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், பாப்பாரப்பட்டி போலீஸ் காலனியை சேர்ந்த தங்கவேல், கணித ஆசிரியராக பணிபுரிந்தார். இவர், 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ - மாணவியரை சிறப்பு வகுப்புக்கு, நேரமாக பள்ளிக்கு வரும்படி கூறியுள்ளார்.

அப்போது, அங்கு வந்த மாணவி ஒருவரை, கட்டி பிடித்து, முத்தம் கொடுக்க முயன்றுள்ளார். அதிர்ச்சியடைந்த மாணவி, அதன்பின், அங்கிருந்து வீட்டிற்கு சென்று விட்டார்.

இதையடுத்து தங்கவேல், மாணவியின் பெற்றோர் மொபைல்போனுக்கு, வாட்ஸாப்பில் மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். பெற்றோர், மாணவியிடம் விசாரித்தபோது, பள்ளியில் நடந்ததை கூறியுள்ளார்.

ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள் நேற்று முன்தினம், தங்கவேலை கைது செய்யக்கோரி, பள்ளியை முற்றுகையிட்டனர். பென்னாகரம் போலீசார், போக்சோவில், தங்கவேலை நேற்று கைது செய்தனர்.