📅 Friday, 16 October 2026 IST | புரட்டாசி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
அன்றாடப் பயன்பாட்டுக்கும் வேலையிடத்திலும் ஏஐ பயன்படுத்த குடியிருப்பாளர்களுக்கு உதவி, சிங்க‌ப்பூர் செய்திகள் எஸ்.ஐ.ஆர் விவகாரம்: ராகுல் காந்தி மனுவுக்கு பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு ஆயுத பூஜை தொடர் விடுமுறை: சென்னையில் இருந்து இன்று 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் போதைப்பொருள் கடத்தலில் சிக்கிய தவெக நிர்வாகி; அதிகாரிகள் தொடர் சோதனையால் பரபரப்பு! தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி இண்டியா கூட்டணி தலைவர்கள் ஆர்ப்பாட்டம் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தேசியக்கொடி பேரணி.. டெல்லியில் 6000 போலீசார் குவிப்பு: அபிஜித் தீப்கே கைதாக வாய்ப்பு

Singapore Tamil October 16, 2026 07:03 PM

புகைமூட்டத் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஏழு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் கடிதம், சிங்க‌ப்பூர் செய்திகள்

புகைமூட்டத் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஏழு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் கடிதம், சிங்க‌ப்பூர் செய்திகள்

புகைமூட்டச் சட்டத்தின்கீழ், ஏழு நிறுவனங்களுக்கு தடுப்பு நடவடிக்கைகளை உள்ளடக்கிய சட்டபூர்வக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தோனீசியாவில் அந்த நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங்களில் தீ வைப்பதை நிறுத்துமாறும் நிலங்களில் எரியும் தீயை அணைப்பதற்கான திட்டங்களைச் சமர்ப்பிக்குமாறும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மைய வாரங்களாக சிங்கப்பூரைப் பாதித்து வரும் புகைமூட்டத்தின் ஒரு பகுதி இந்தோனீசியாவில் உள்ள இந்த ஏழு நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங்களில் ஏற்பட்ட தீயினால் உருவானது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்துள்ளார்.

தீ வைப்பவர்கள் அல்லது தீ வைக்க அனுமதிப்பவர்களை இலக்காகக் கொண்டு தேசியச் சுற்றுப்புற வாரியம் அந்தக் கடிதத்தை, சிங்கப்பூரின் எல்லைதாண்டிய புகைமூட்டத் தடுப்புச் சட்டத்தின்கீழ் அனுப்பியுள்ளது.

அந்த ஏழு நிறுவனங்களில் மூன்று நிறுவனங்கள் 2015ஆம் ஆண்டு புகைமூட்டப் பிரச்சினையின்போதும் இதேபோன்ற சட்டபூர்வக் கடிதத்தைப் பெற்றன. அந்த விவகாரம் இன்னும் முடிவடையாத நிலையில் உள்ளது.

பூமி அந்தாலாஸ் பெர்மாய், பூமி மேக்கார் ஹிஜாவ், எஸ்பிஏ அந்தாலாஸ் வுட் இண்டஸ்ட்ரீஸ் ஆகியன அந்த நிறுவனங்கள்.

அவற்றுடன், பராமித்ரா முலியா லங்கெங், சுமத்ரா ஆலம் அனுகிரா, ஹுதான் லெஸ்தாரி ராயா, பாங்கானீசியா ஆகிய மேலும் நான்கு நிறுவனங்களுக்கும் தற்போது கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

புகைமூட்டத்திற்குக் காரணமான நிறுவனங்களை அடையாளம் காணும் பொருட்டு, இந்த வட்டாரத்தில் தீப்பற்றி எரியும் இடங்கள் மற்றும் தீயினால் புகை கிளம்பும் பகுதிகளைத் தேசியச் சுற்றுப்புற அமைப்பு கண்காணித்து வருவதாக திருவாட்டி ஃபூ வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) செய்தியாளர்களிடம் கூறினார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

“தற்போது நிலவிவரும் சூழ்நிலையையும் சட்டபூர்வக் கடிதங்களுக்கு நிறுவனங்கள் அளிக்கும் பதில்களையும் தொடர்ந்து கண்காணிப்போம். தேவைப்பட்டால், ஆதாரங்களின் அடிப்படையில் எல்லைதாண்டிய புகைமூட்டத் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்போம்,” என்று அவர் கூறினார்.

அந்த ஏழு நிறுவனங்களும் சுமத்ராவில் செயல்படுபவை என்றார் அவர்.

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய அம்சங்கள் குறித்து கடிதத்தில் விளக்கப்பட்டுள்ளது.

1) நிறுவனங்கள் தங்களுக்குச் சொந்தமான அல்லது ஆக்கிரமிப்பில் உள்ள நிலத்தில் ஏற்படும் எந்தவொரு தீயையும் அணைக்க அல்லது பரவாமல் தடுக்கத் தீயணைப்பு வீரர்களைப் பணியமர்த்துவது,

2) தீ வைப்பதை நிறுத்துவது அல்லது புதிதாகத் தொடங்காமல் இருப்பது,

3) நிறுவனங்கள் தங்கள் நிலங்களில் எரியும் தீயை அணைப்பதற்கும் அது மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்குமான திட்டங்களைத் தேசியச் சுற்றுப்புற அமைப்பிடம் சமர்ப்பிப்பது.