📅 Friday, 16 October 2026 IST | புரட்டாசி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
அன்றாடப் பயன்பாட்டுக்கும் வேலையிடத்திலும் ஏஐ பயன்படுத்த குடியிருப்பாளர்களுக்கு உதவி, சிங்க‌ப்பூர் செய்திகள் எஸ்.ஐ.ஆர் விவகாரம்: ராகுல் காந்தி மனுவுக்கு பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு ஆயுத பூஜை தொடர் விடுமுறை: சென்னையில் இருந்து இன்று 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் போதைப்பொருள் கடத்தலில் சிக்கிய தவெக நிர்வாகி; அதிகாரிகள் தொடர் சோதனையால் பரபரப்பு! தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி இண்டியா கூட்டணி தலைவர்கள் ஆர்ப்பாட்டம் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தேசியக்கொடி பேரணி.. டெல்லியில் 6000 போலீசார் குவிப்பு: அபிஜித் தீப்கே கைதாக வாய்ப்பு

Singapore Tamil October 16, 2026 07:03 PM

சிங்கப்பூர் புகைமூட்டம்: பிஎஸ்ஐ 300ஐ தாண்டக்கூடும்

சிங்கப்பூர் புகைமூட்டம்: பிஎஸ்ஐ 300ஐ தாண்டக்கூடும்

சிங்கப்பூரில் நிலவும் புகைமூட்டம், வானிலை நிலவரங்கள் காரணமாக, வரும் நாள்களில் காற்றுத் தரம் அபாயகரமான அளவை எட்டக்கூடும் என்றும் அப்போது பிஎஸ்ஐ குறியீடு 300ஐத் தாண்டக்கூடும் என்றும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 16) தெரிவித்தார்.

இருப்பினும், இன்னும் மூன்று முதல் நான்கு வாரங்களில் தொடங்கவிருக்கும் பருவமழை இடைக்காலம், காற்றின் தரத்தை மேம்படுத்தக்கூடும் என்று அவர் கூறினார். கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, மனிதவளத் தற்காலிக அமைச்சர் ஜாஸ்மின் லாவ் ஆகியோருடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

“டிசம்பர் மாதத் தொடக்கத்தில் வடகிழக்கு பருவமழைக் காற்று வீசத் தொடங்கும்போது, ​​சுமத்ரா, கலிமந்தான் பகுதிகளிலிருந்து வரும் புகைமூட்டம் சிங்கப்பூருக்கு வராத திசையை நோக்கிச் சென்றுவிடும்,” என்று திருவாட்டி ஃபூ கூறினார்.

தேவை அதிகரித்ததன் காரணமாகச் சில சில்லறை விற்பனைக் கடைகளில் முகக்கவசங்கள் தற்காலிகமாகக் கிடைக்காமல் போகலாம் என்றாலும் சில்லறை விற்பனையாளர்களின் கிடங்குகளிலும் அரசாங்கத்தின் கையிருப்பிலும் போதுமான அளவு என்95 முகக்கவசங்கள் உள்ளன என்பதை அவர் வலியுறுத்திக் கூறினார்.

“புகைமூட்டச் சூழல் தொடர்ந்து மோசமடைந்தால், நாங்கள் மீண்டும் ஒருமுறை முகக்கவசங்களை விநியோகிக்கும் நடவடிக்கையை மேற்கொள்வோம்,” என்று அவர் தெரிவித்தார்.

தீவு முழுவதும் முகக்கவசங்களை வழங்கும் இயந்திரங்கள் படிப்படியாக நிறுவப்பட்டு வருகின்றன. அக்டோபர் 16ஆம் தேதிக்குள், பொதுப் போக்குவரத்து மையங்கள், சமூக சேவை அலுவலகங்கள் என மொத்தம் 37 இடங்களில் இவை பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்.

சிங்கப்பூரில் கடைசியாக 2015ஆம் ஆண்டில் பிஎஸ்ஐ அளவீடு 300க்கு மேல் பதிவானது. அப்போது அந்த அளவு அதிகபட்சமாக 341ஐ எட்டியிருந்தது.

இது 24 மணிநேர கால அளவைக் கொண்டு கணக்கிடப்படுவதால், நீண்ட நேரம் காற்று மாசுபாட்டிற்கு ஆளாவதை மதிப்பிடுவதற்கு இந்த அளவீடு பயனுள்ளதாக இருக்கும் என்று அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்தார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

மக்கள் பிஎஸ்ஐ குறியீட்டுடன், காற்றுத் தரத்தை அளவிடும் மற்றொரு அளவீடான, ஒவ்வொரு மணிநேரத்திற்குமான பிஎம்2.5 அளவீடுகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.

24 மணிநேர பிஎஸ்ஐ அளவு அதிகமாகவும், அதே சமயம் பிஎம்2.5 அளவு குறைவாகவும் இருப்பது, தற்போதைய சூழல் மேம்பட்டுள்ளதைக் காட்டுகிறது என்று திருவாட்டி ஃபூ தெரிவித்தார்; இருப்பினும், நீண்ட நேரம் இத்தகைய சூழலில் இருப்பது தொடர்ந்து கவலைக்குரிய ஒன்றாகவே உள்ளது.

எனவே, அடுத்த நாளுக்கான செயல்பாடுகளைத் திட்டமிடுவதற்கு முன், 24 மணிநேர பிஎஸ்ஐ அளவீட்டைப் பார்க்குமாறு பொதுமக்களுக்கு திருவாட்டி ஃபூ அறிவுறுத்தினார். மேலும், தேசிய சுற்றுப்புற அமைப்பு தனது இணையத்தளத்தில் இந்தத் தகவலை இன்னும் தெளிவாகக் குறிப்பிடுமாறு தாம் கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.